உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கறிஞர் ஜெயா சுகின் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2016 முதல், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி,
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி : மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

வழக்கறிஞர் ஜெயா சுகின் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2016 முதல், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி, அவற்றுக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதன்படி, ஆண்டுக்கு, சராசரியாக, 4,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எந்த அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, குடிமகன் என்ற முறையில் தாக்கல் செய்ததாக, ஜெயா சுகின் தெரிவித்தார். அதற்கு, 'நாம் எல்லாரும் இந்திய குடிமக்கள் தான். இந்த மனுவை வாபஸ் பெற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்; இல்லையெனில் மனு தள்ளுபடிசெய்யப்படும்' என,
நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவதாக கூறி, மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, ஜெயா சுகின் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
29-அக்-202015:29:24 IST Report Abuse
sankaseshan சுப்பன் குப்பன் எல்லாம் நேரடியாக SC லில் வழக்கு போடுகின்றனர் விதிமுறை தெரியாமல் நேரத்தை வீணடிக்கின்றனர் .
Rate this:
Cancel
Ganesan Marimuthu - KA,இந்தியா
29-அக்-202010:17:03 IST Report Abuse
Ganesan Marimuthu ஒரு குடிமகனின் எல்லை அவர் வசிக்கும் உள்ளாட்சி, நகராட்சிக்கு உடபட்டது. அங்கு முதலில் நிவாரணம் தேட வேண்டும். மக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் குடிமகன் என்று ஒரு கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க முடியாது? அபராதம் வசூலித்து மனு தள்ளுபடி செய்து இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-அக்-202004:24:22 IST Report Abuse
blocked user இவர்கள் தங்களுக்கு தலைவலி என்றால் கூட நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று மனுக்கொடுத்து விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X