வேகத்தில் மிரட்டினார் பும்ரா

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020
Share
Advertisement
அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, கோஹ்லியின் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடையின் பின்பகுதியில்

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.



latest tamil news




ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, கோஹ்லியின் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை அணி 'ரெகுலர்' கேப்டன் ரோகித் சர்மா நேற்றும் விளையாடவில்லை. இவருக்குப் பதில் கேப்டனாக களமிறங்கிய போலார்டு, 'டாஸ்' வென்று, பீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


latest tamil news




பெங்களூரு அணியில் காயத்தால் அவதிப்படும் நவ்தீப் சைனி, பின்ச், மொயீன் அலி நீக்கப்பட்டு, ஷிவம் துபே, ஸ்டைன், பிலிப் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (74), பிலிப் (33) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பின் வந்த கேப்டன் கோஹ்லி (9), டிவிலியர்ஸ் (15), துபே (2), கிறிஸ் மோரிஸ் (4) நீடிக்கவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டும் எடுத்தது. வேகத்தில் மிரட்டிய மும்பையின் பும்ரா 3 விக்கெட் சாயத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X