சிறப்பான பாதுகாப்பு

Added : அக் 28, 2020
Share
Advertisement
சிறப்பான பாதுகாப்புஇந்திய - - சீன எல்லை மற்றும் ஜம்மு -- காஷ்மீரில், எவ்வித நிலைமையையும் சமாளிக்கும் அளவுக்கு, நம் படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். நம் ராணுவத்தின் சிறப்பான பாதுகாப்பு திறனை கண்டு பெருமை அடைகிறேன். படையின் ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளது. ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,பொது சிவில் சட்டம்
சிறப்பான பாதுகாப்பு

சிறப்பான பாதுகாப்பு

இந்திய - - சீன எல்லை மற்றும் ஜம்மு -- காஷ்மீரில், எவ்வித நிலைமையையும் சமாளிக்கும் அளவுக்கு, நம் படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். நம் ராணுவத்தின் சிறப்பான பாதுகாப்பு திறனை கண்டு பெருமை அடைகிறேன். படையின் ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளது.
ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

பொது சிவில் சட்டம் வேண்டும்

சீனாவின் உதவியுடன், ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப கொண்டு வரப்படும் எனக் கூறும், மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மீது, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் தேசியக் கொடியை அவமதிப்பவர்கள், தேச துரோகிகளாக கருதப்பட வேண்டும். நாட்டில், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, சிவசேனா ஏற்கனவே தெரிவித்துள்ளது.

சஞ்சய் ராவத்

எம்.பி., -- சிவசேனா

கட்சிகளுக்கு தரம் வேண்டும்

பா.ஜ., பெண் அமைச்சர் இமர்த்தி தேவி குறித்து, கமல்நாத் தெரிவித்த தரக்குறைவான கருத்துக்கு, காங்., தலைவர் சோனியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மக்கள் தொகையில், 50 சதவீதம் பெண்களை கொண்டுள்ள நாட்டில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான தரத்தை கொண்டிருக்க வேண்டும்.

ஜோதிராதித்ய சிந்தியா
எம்.பி., -- பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X