பொது செய்தி

இந்தியா

பீஹாரில் முதல்கட்ட தேர்தலில் 54 சதவீத ஓட்டுப்பதிவு

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாட்னா: பீஹார் சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில், 54 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கொரோனா பரவலிலும், மக்கள் வரிசையில் நின்று உற்சாகமாக ஓட்டளித்தனர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, அக்., 28, நவ., 3, 7ம் தேதிகளில், தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் கடந்த மாத இறுதியில் அறிவித்தது.கொரோனா பரவத்
Biharpolls,  பீஹார்,  தேர்தல், கொரோனா பரவல்,ஓட்டுப்பதிவு

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில், 54 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கொரோனா பரவலிலும், மக்கள் வரிசையில் நின்று உற்சாகமாக ஓட்டளித்தனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, அக்., 28, நவ., 3, 7ம் தேதிகளில், தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் கடந்த மாத இறுதியில் அறிவித்தது.கொரோனா பரவத் துவங்கிய பின், நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது தான். இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.




கிருமிநாசினி


மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், முதல் கட்டமாக, 71 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில், 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அப்போதே பல ஓட்டுச்சாவடிகளில், ஓட்டளிப்பதற்காக, மக்கள் வரிசையில் காத்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, 1,000 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ஓட்டளிப்பதற்கு முன், வாக்காளர்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ள, ஓட்டுச்சாவடிகளில், கிருமிநாசினி, சோப் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. மேலும் வாக்காளர்களுக்கு, ஒரு முறை பயன்படுத்தப்படும் கையுறைகள் வழங்கப்பட்டன.

அதை அணிந்து தான், வாக்காளர்கள் ஓட்டளித்தனர். மேலும், ஓட்டுச்சாவடிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கிருமிநாசினி மூலம், அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன.ஓட்டுப்பதிவு நேரமும், ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருப்பவர்கள், கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து ஓட்டளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் வழியாக ஓட்டளிக்கவும், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், லக் ஷி சராய் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி தலைவருமான, ஜிதன் ராம் மஞ்சி, கயா தொகுதியிலும் ஓட்டளித்தனர்.


பாதுகாப்பு ஏற்பாடுகள்



முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த, 71 தொகுதிகளில், 35 தொகுதிகள், நக்சல் ஆதிக்கம் உள்ளவை. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, ஓட்டுப்பதிவு நடந்து முடிந்ததாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. அப்போது, 54 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இரண்டாம் கட்டமாக, 94 தொகுதிகளில், நவ., 3லும், மூன்றாம் கட்டமாக, 78 தொகுதிகளில், நவ., 7லும் தேர்தல் நடக்கின்றன. ஓட்டு எண்ணிக்கை, நவ., 10ல் நடக்கிறது.


முதலில் ஓட்டு; பிறகு உணவு



பீஹாரில் நடந்த முதல் கட்ட ஓட்டுப்பதிவை முன்னிட்டு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாவது:பிஹார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்து ஜனநாயகத்தின் மகத்தான திருவிழாவில் பங்கேற்குமாறு, மக்களை கேட்டுக்கொள்கிறேன். முதலில் ஓட்டளிப்போம்; பின்னரே உணவு.இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.


வளர்ச்சி மாநிலமாக்குவார் மோடி



பீஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில், முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது:மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பீஹாரில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தே.ஜ., கூட்டணிக்கு, மக்கள் மீண்டும் வாய்ப்பளித்தால், பீஹாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக, பிரதமர் மோடி மாற்றுவார் என்பது நிச்சயம்.

பாட்னா மெட்ரோ ரயில் திட்டம், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், இலவச காஸ் இணைப்பு திட்டம் என, மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பீஹாரில் பல பாலங்கள் கட்டவும், மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில், மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால், 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202005:36:37 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அதிகரிக்காத ஓட்டு சதவீதம் ஏற்கனவே ஆண்டு கொண்டிருக்கும் கட்சி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-அக்-202004:14:35 IST Report Abuse
blocked user உயிருக்குப்பயந்து வாக்குச்சாவடிக்கு வரவில்லையா அல்லது யார் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்களா?
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29-அக்-202020:32:30 IST Report Abuse
Mirthika Sathiamoorthiமீதியெல்லாம்? உயிருக்குப்பயந்து வாக்குச்சாவடிக்கு வரவில்லையா அல்லது யார் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்களா? எல்லோருக்கும் ஒட்டு எனும் அரசியல் சமநிலை ஏற்பட்டாலும் ...சமூகதில் ஜாதி மதம் கடந்த சமநிலை, பொருளாதார சமநிலை ஏற்படாத வரை ஓட்டுகள் மிரட்டியும் விலைக்கும் வாங்கப்படும்...நான் சொல்லை அண்ணல் அம்பேத்கார் சொன்னது.அப்புடியே நடக்குதில்ல தீர்க்க தரிசி..மேற் சொன்ன ரெண்டொடு அடுத்த ரெண்டு இப்போ புதுசா சேந்திருக்கு உயிருக்குப்பயந்து வாக்குச்சாவடிக்கு வர மாட்டார்கள் மற்றும் யார் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்துவிடுவார்கள்.....மதம் ஜாதி பேசாமல் தேர்தலை சந்திக்கத்தான் முடியுமா? அப்புறம் எங்கே நூறுசதவீதம் வாக்குப்பதிவு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X