'காட்டாட்சி' கட்சிகள் ஏமாற்றுகின்றன: மோடி சீற்றம்

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
தர்பங்கா: ''பீஹாரில் காட்டாட்சி நடத்திய கட்சிகள் ஒன்று சேர்ந்து, மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. அந்த தீய சக்திகளை அடித்து விரட்ட மக்கள் தயாராகி விட்டனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் மீது தாக்கி பேசினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்
'காட்டாட்சி' கட்சிகள் ஏமாற்றுகின்றன பிரசார கூட்டம் ,மோடி சீற்றம்

தர்பங்கா: ''பீஹாரில் காட்டாட்சி நடத்திய கட்சிகள் ஒன்று சேர்ந்து, மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. அந்த தீய சக்திகளை அடித்து விரட்ட மக்கள் தயாராகி விட்டனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் மீது தாக்கி பேசினார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தர்பங்காவில் நேற்று பிரசாரம் செய்தார். முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் செய்வதாக எங்கள் மீது குறை கூறியவர்கள், தற்போது பாராட்டுகின்றனர். சீதா தேவி பிறந்த மிதிலா நகரத்தின் ஒரு பகுதியான தர்பங்காவில் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள், தங்களுடைய கமிஷன் பற்றி மட்டுமே கவலைப்பட்டனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்த பிறகு தான், மிதிலா நகரம் உட்பட, பீஹாரில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இருளில் இருந்து மாநிலத்தை மீட்டெடுத்த, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசை மீண்டும் தேர்வு செய்வதற்கு, உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு தான் இந்த தேர்தல். முன்பு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் போன்றவற்றின் காட்டாட்சியில், மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கே அஞ்ச வேண்டிய நிலை இருந்தது.காட்டாட்சி நடத்திய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, இளவரசரான தேஜஸ்வி யாதவ் எப்படி நல்ல ஆட்சியை அளிப்பார் என்று நம்புவது. அரசியலுக்காக ஆட்களை கடத்தும் உரிமம் பெற்றவர்கள் அவர்கள்.மக்கள் பணத்தை கொள்ளையடித்த அவர்கள், தங்களுக்கு கிடைத்து வந்த வருவாய் போய்விட்டதே என்பதால் தான், மத்திய அரசின் திட்டங்களையும், முதல்வர் நிதிஷ் குமார் அரசின் திட்டங்களையும் எதிர்க்கின்றனர்.இவ்வாறு அவர்பேசினார்.


ராகுல் தாக்குதல்மேற்கு சம்பரான் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:வேலைவாய்ப்பை அளிப்போம் என்று, மோடியும், நிதிஷும் முன்பு பேசி வந்தனர். ஆனால், இனி மேல் அவர்கள் பேச மாட்டார்கள். ஏனென்றால், அவர்களால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தசரா பண்டிகையின்போது, மோடி உருவ பொம்மையை எரித்து உள்ளனர். இது, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் கோபத்தின் வெளிப்பாடே. தங்களுடைய பிரசாரத்தின்போது, வெளிநாடுகள் குறித்து பேசுகிறார்; உள்ளூர் பிரச்னை குறித்து பேசுவதில்லையே என்று, மோடி மீதும், நிதிஷ் குமார் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
29-அக்-202021:07:47 IST Report Abuse
J.Isaac இப்பொழுது நடக்கிறது பிஜேபி கூட்டணி ஆட்சி தானே.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29-அக்-202020:42:58 IST Report Abuse
Mirthika Sathiamoorthi GDP 9% இல் இருந்து 12%, 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிங்க வருமானம் இரட்டிப்பு...நல்ல கனவு எழுப்பிவிட்டுடீங்களே..'காட்டாட்சி' கட்சிகள் ஏமாற்றுகின்றன
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-அக்-202004:18:32 IST Report Abuse
blocked user "தசரா பண்டிகையின் போது, மோடி உருவ பொம்மையை எரித்து உள்ளனர்" - சீக்கியர்கள் தசரா கொண்டாடினார்களா? இல்லை. காங்கிரஸ் கட்சி கூலிக்கு ஆள் பிடித்து நடத்திய அக்கிரமம் அது. வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X