பொது செய்தி

தமிழ்நாடு

அரசே விதிகளை மீறி கோவில் சொத்தை பறிக்கலாமா?

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பொது நோக்கத்துக்காக கோவில் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான அரசாணைகள், நீதிமன்ற தீர்ப்புகள், கள்ளக்குறிச்சி அர்த்தநாரீஸ்வரர் சொத்துகள் விஷயத்தில், அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக, அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்படியான
அரசே விதிகளை மீறி கோவில் சொத்தை பறிக்கலாமா?

பொது நோக்கத்துக்காக கோவில் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான அரசாணைகள், நீதிமன்ற தீர்ப்புகள், கள்ளக்குறிச்சி அர்த்தநாரீஸ்வரர் சொத்துகள் விஷயத்தில், அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக, அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல், நில மோசடியாளர்கள் போன்று, கோவில் நிலம் அதிகாரிகளால் பறிக்கப்படுவது, பக்தர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், திருக்கோவில்களுக்கு மன்னர்களாலும், நிலச்சுவான்தாரர்களாலும் வழங்கப் பட்ட, நிலங்களில் இருந்து வரும் வருமானம் வாயிலாக பூஜைகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களின் காணிக்கைக்கு அப்பால், நிலங்களில் இருந்து வரும் வருவாயே பிரதான நிதி ஆதாரமாக உள்ளது.

இதில், அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால், பெரும்பகுதி கோவில் சொத்துக்கள் தனியாரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதற்கு போட்டியாக, பொது நோக்கம் என்ற பெயரில், அரசு நிர்வாகமே கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்வது, பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:கோவில் சொத்துக்களை பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாக, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், பல்வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை, அரசு அதிகாரிகள் புறக்கணிப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பொது நோக்க அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும்போது, கோவில் நிலங்கள் விஷயத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ், அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக, 1984ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

இதன்படி, திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தினால், கோவிலின் வருவாய் பாதிக்கப்படும்.நிலம் கேட்பு துறையினர், கடைசி கட்டமாக தவிர்க்க முடியாத நிலையில் தான், கோவில் நிலங்களை கையகப்படுத்த பரிசீலிக்க வேண்டும். கோவில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான தவிர்க்க முடியாத காரணத்தை விளக்க குறிப்பு வாயிலாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட எதிர்ப்பின்மை சான்றிதழ், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலத்தில் இருந்து, கோவில் எந்த பயனும் பெற இயல வில்லை என்பதை சான்றளிக்க வேண்டும்.இந்த நடைமுறையை பின்பற்ற, அனைத்து கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும். இதற்கு மாறாக, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு, கோவில் நிலம் எடுக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.இத்தகைய விதிமீறல் நடவடிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- - நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
31-அக்-202012:23:49 IST Report Abuse
Marai Nayagan "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" மற்றும் "கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று அவ்வை சொன்னது மக்கள் அறவழியில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதாகவே. ஆதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களை அமைத்து மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக மக்கள் வாழ வழி செய்தனர். ஆனால் இந்த நாத்திக போர்வையில் இயங்கும் சி(பெ)ரியாரின் திருட்டு திராவிட கட்சிகள் இந்து கோவில்களை சுரண்டி அந்நிய மதமாற்ற கூட்டத்திற்கு உதவி செய்கின்றனர். இந்துக்கள் ஒற்றுமையுடன் கோவில் சொத்துக்களை காத்து நம் முன்னோர் செய்த நற்செயலை தொடரவேண்டும்
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
31-அக்-202012:15:31 IST Report Abuse
Marai Nayagan ஜெயலலிதா இருந்தபோது பல கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு செய்ததை பார்த்தோம். ஆனால் இந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திமுக (நில அபகரிப்பு) போலவே கோயில் சொத்துக்களை பாதுகாக்க பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதுதான் இந்துக்கள் சிறிது விழிப்புணர்வு பெற்றுள்ளனர்
Rate this:
Cancel
29-அக்-202021:31:19 IST Report Abuse
சூரியா அரசாங்கத்தின் பல கட்டிடங்கள், கோவில் நிலத்தில்தான் கட்டப்பட்டு உள்ளது. சென்னை தி. நகர் இராமகிருஷ்ண மேல் நிலைப்பள்ளி, DAV Higher Sec Scool, லயோலா கல்லூரி முதலியவைகள் கோவில் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளன. இப்படி அரசியல்வாதிகளின் சுரண்டலுக்கு இந்து கோவில்கள்/ மதம் தேவைப்படும், ஆனால் இகழ்வது இந்து மதத்தையும், அவர்கள் நம்பிக்கைகளையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X