பொது செய்தி

தமிழ்நாடு

தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா பரவாது: அரசு மருத்துவமனை இயக்குனர் திட்டவட்டம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 28, 2020
Share
Advertisement
சென்னை:''தாய்ப்பால் வாயிலாக, குழந்தைக்கு கொரோனா தொற்று பரவாது. எனவே, அச்சமின்றி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலாம்,'' என, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறினார். பிறக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில், தாய்ப்பால்
தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா பரவாது: அரசு மருத்துவமனை இயக்குனர் திட்டவட்டம்

சென்னை:''தாய்ப்பால் வாயிலாக, குழந்தைக்கு கொரோனா தொற்று பரவாது. எனவே, அச்சமின்றி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலாம்,'' என, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறினார்.

பிறக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில், தாய்ப்பால் அவசியம் குறித்து, கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டு, தன்னார்வலர்கள் வாயிலாக சேகரிக்கப்படும் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டினால் தொற்று பரவும் என்ற அபாயத்தில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவுமா என, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, ஆய்வில் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ மனையின் இயக்குனர் விஜயா கூறியதாவது: தாய்ப்பால் வழியே கொரோனா தொற்று பரவுகிறதா என்பது குறித்த ஆய்வு, ஜூன் முதல் நடந்து வருகிறது. மருத்துவமனையில் பதிவு செய்த கர்ப்பிணியர் உடல்நிலை, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர்களின் பிரசவ தேதி முதல் கண்காணிக்கப்பட்டு, பிரசவத்திற்கு பின், தாய்ப்பாலில் கொரோனா பரவல் இருக்கிறதா என்பது கண்டறியப்படுகிறது.

அதன்படி, 750 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. இதுவரை, 600 தாய்மார்களின், தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவரின் தாய்ப்பாலில் மட்டுமே, தொற்று இருப்பது தெரிய வந்தது. மீதமுள்ள, 599 தாய்ப்பாலில், கொரோனா தொற்று இல்லை. மேலும், பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தம், குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய பனிக் குடநீர், குழந்தைகளின் நஞ்சு பை, குழந்தைகளின், 'ஸ்வாப்' மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பால் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம்.

மருத்துவ ஆய்வுகள் அடிப்படையில், பச்சிளம் குழந்தைகளுக்கு அரணாக விளங்கும் தாய்ப்பால் வழியே, கொரோனா பரவ வாய்ப்பில்லை.எனவே, அச்சமின்றி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாராளமாக தாய்ப்பால் ஊட்டலாம். தாய்ப்பால் வாயிலாக, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X