அரசியல் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (100)
Share
Advertisement
சென்னை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில், எம்.பி.,க்களை புறக்கணித்து விட்டு, பெண்ணினத்தையே அவமதித்த, டாக்டர் சுப்பையா சண்முகத்தை நியமித்ததற்கு, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக் குழுவில், தமிழக எம்.பி.,க்கள் யாரையும் நியமிக்காத, மத்திய அரசின் செயல் கண்டனத்துக்கு உரியது.
 டாக்டர் சுப்பையா சண்முகம்
நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில், எம்.பி.,க்களை புறக்கணித்து விட்டு, பெண்ணினத்தையே அவமதித்த, டாக்டர் சுப்பையா சண்முகத்தை நியமித்ததற்கு, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக் குழுவில், தமிழக எம்.பி.,க்கள் யாரையும் நியமிக்காத, மத்திய அரசின் செயல் கண்டனத்துக்கு உரியது. மருத்துவமனை, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட உள்ளது; பா.ஜ., பணத்தில் அல்ல.
ஒரு பெண்ணின் வீட்டின் முன் அநாகரிகமாக, அவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட, டாக்டர் சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, அதிகார துஷ்பிரயோகம்.
பெண்களின் பெருமை குறித்து, உயர்ந்த சிந்தனை உள்ள டாக்டர் சுதா சேஷய்யன், நிர்வாகக் குழுவிலிருந்து விலக வேண்டும்.

நிர்வாக் குழுவை உடனே மாற்றி அமைக்க வேண்டும். தென் மாவட்ட எம்.பி.,க் களை நியமிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: ஒழுக்கக்கேடாக நடந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை, மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின், நிர்வாக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை கண்டிக்கிறேன்.அவரை நிர்வாகக் குழுவில் இருந்து, உடனே விலக்கவில்லை என்றால், கடுமையான போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
03-நவ-202020:18:52 IST Report Abuse
S.Ganesan இவரின் தந்தை ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்தார் பாலம் கட்டுவதற்கு என்று கேட்டாரே ? அதே போல் இப்போது மருத்துவ மனை நிர்வாக குழுவில் பங்கேற்க எந்த எம் பிக்கு தகுதி இருக்கிறது ? அவர்கள் என்ன எம் பி பி எஸ் அல்லது எம் டி படித்திருக்க்கிறார்களா ?
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
01-நவ-202015:03:28 IST Report Abuse
Rajasekaran எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், ஆக்க பூர்வமான யோசனைகளை யார் சொல்வது? எதிர்க்கட்சி என்றால் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா ?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-அக்-202009:54:50 IST Report Abuse
 Muruga Vel கடுமையான போராட்டம்னா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X