சென்னை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில், எம்.பி.,க்களை புறக்கணித்து விட்டு, பெண்ணினத்தையே அவமதித்த, டாக்டர் சுப்பையா சண்முகத்தை நியமித்ததற்கு, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக் குழுவில், தமிழக எம்.பி.,க்கள் யாரையும் நியமிக்காத, மத்திய அரசின் செயல் கண்டனத்துக்கு உரியது. மருத்துவமனை, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட உள்ளது; பா.ஜ., பணத்தில் அல்ல.
ஒரு பெண்ணின் வீட்டின் முன் அநாகரிகமாக, அவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட, டாக்டர் சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, அதிகார துஷ்பிரயோகம்.
பெண்களின் பெருமை குறித்து, உயர்ந்த சிந்தனை உள்ள டாக்டர் சுதா சேஷய்யன், நிர்வாகக் குழுவிலிருந்து விலக வேண்டும்.
நிர்வாக் குழுவை உடனே மாற்றி அமைக்க வேண்டும். தென் மாவட்ட எம்.பி.,க் களை நியமிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: ஒழுக்கக்கேடாக நடந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை, மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின், நிர்வாக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை கண்டிக்கிறேன்.அவரை நிர்வாகக் குழுவில் இருந்து, உடனே விலக்கவில்லை என்றால், கடுமையான போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE