'பிளே ஆப்' சுற்றில் மும்பை; பெங்களூருவை வீழ்த்தியது

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020
Share
Advertisement
அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் 'பிளே ஆப்' சுற்றை உறுதி செய்தது மும்பை அணி. லீக் போட்டியில் பெங்களூருவை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோஹ்லியின் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை கேப்டன் போலார்டு, 'டாஸ்' வென்று, பீல்டிங் தேர்வு செய்தார். படிக்கல்

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் 'பிளே ஆப்' சுற்றை உறுதி செய்தது மும்பை அணி. லீக் போட்டியில் பெங்களூருவை 5 விக்கெட்டில் வீழ்த்தியது.



latest tamil news




ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோஹ்லியின் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை கேப்டன் போலார்டு, 'டாஸ்' வென்று, பீல்டிங் தேர்வு செய்தார்.


படிக்கல் அரைசதம்

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல், பிலிப் (33) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. படிக்கல் இத்தொடரில் 4வது அரைசதம் கடந்தார். கோஹ்லி (9), டிவிலியர்ஸ் (15) துபே (2) நீடிக்கவில்லை. படிக்கல் 74 ரன் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டும் எடுத்தது. வேகத்தில் மிரட்டிய மும்பையின் பும்ரா 3 விக்கெட் சாயத்தார்.


latest tamil news




சூர்யகுமார் விளாசல்

மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (18), இஷான் கிஷான் (25) நம்பிக்கை தர, சவுரப் திவாரி (5), குர்னால் பாண்ட்யா (10) கைவிட்டனர். சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிக்க, மும்பை அணி வெற்றியை வேகமாக நெருங்கியது.

ஸ்டைன் பந்தில் சூர்யகுமார், மோரிஸ் பந்தில் பாண்ட்யா (17) என தலா ஒரு சிக்சர் அடிக்க வெற்றி எளிதானது. மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (79), போலார்டு (4) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி, 'பிளே ஆப்' வாய்ப்பை உறுதி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X