கொரோனா இறப்பு விகிதம்: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறப்பு விகிதம்: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

Updated : அக் 30, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (5)
Share
சென்னை,:''கொரோனா இறப்பு விகிதத்தை, மேலும் குறைக்கும் வகையில், கலெக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.பண்டிகை கால கொரோனா தடுப்பு பணிகள், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:கொரோனா
கொரோனா இறப்பு விகிதம்: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை,:''கொரோனா இறப்பு விகிதத்தை, மேலும் குறைக்கும் வகையில், கலெக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
பண்டிகை கால கொரோனா தடுப்பு பணிகள், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நோய் பரவல் கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.


பிரதமர் பாராட்டுஅனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதை கருத்தில் வைத்துதான், தமிழகத்தை போல, பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என, பிரதமர் பாராட்டினார்.கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்கு நம் நடவடிக்கைகளை, முனைப்புடன்செயல்படுத்த வேண்டும்.கொரோனா தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்கு, இதுவரை அரசு, 7,372 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இதில் மருத்துவ செலவினம், 1,983 கோடி ரூபாய். நிவாரணம் சார்ந்த செலவினம், 5,389 கோடி ரூபாய். இதுவரை, 96.6 லட்சம் பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நாள்தோறும், 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடந்து வருகிறது.உயிர்காக்கும் மருந்துகளாக, டொஸிலிசுமாப் - 400 எம்.ஜி., ரெம்டெஸ்விர் - 100 எம்.ஜி., இனாக்சபெரிசன் - 40 எம்.ஜி., போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.


அரசியல் ஆதாயம்மருந்துகள், பரிசோதனை கருவிகள், என் - 95 முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்மூடி முக கவசங்கள், 'சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே' இயந்திரங்கள், தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.நம் மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய் தொற்று, 7.39 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது. 17 நாட்களாக நோய் தொற்றின் எண்ணிக்கை, 5,000 நபர்களுக்கு குறைவாகவே உள்ளது. நான்கு நாட்களாக, 3,000 நபர்களுக்கு குறைவாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, 30 ஆயிரமாக குறைந்துள்ளது.நாட்டிலேயே சிகிச்சை முடிந்து, குணமானவர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில், 6.75 லட்சமாக உள்ளது. இறப்பு சதவீதம், 1.53 சதவீதமாகவே உள்ளது.
இறப்பு விகிதத்தை, மேலும் குறைக்கும் வகையில் கலெக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்து, நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.சிறப்பு மையங்களில், அவ்வப்போது ஆய்வு செய்து, சிகிச்சை பெறுபவர்களுக்கு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை வருவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தொடர்ந்து கண்காணித்து, தொற்று ஏற்படாத வண்ணம், முக கவசம், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க, ஒலிபெருக்கிகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, நோய் பரவல், இன்று படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களில், கொரோனா பரவல் இருந்து வருகிறது.எனவே, அரசு எடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதை, சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும். நாள்தோறும் அறிக்கைவிட்டு, மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேடுவதையும், அவர்கள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.


சென்னை மக்கள் அலட்சியம்: முதல்வர் வருத்தம்மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தின் இறுதியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:கொரோனா பரவலை தடுக்க, நாம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். பொதுமக்கள் அதை சரிவர கடைப்பிடிப்பது கிடையாது. வெளியில் சென்றால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்கும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைப்பிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம், இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில், 35 சதவீதம் பேர் முக கவசம் அணிவது கிடையாது. தீபாவளி பண்டிகை வருவதால், சென்னையில் தெருக்கள் முழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பலர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.இவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், முக கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும். நோய் பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X