எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலர் யார்? நழுவி ஓடும் மூத்த அதிகாரிகள்!

Updated : அக் 29, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக அரசின் தலைமை செயலராக பதவி வகித்து வரும், சண்முகத்தின் பதவி காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவுக்கு வரும் நிலையில், புதிய தலைமை செயலராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், புதிய பொறுப்பை ஏற்று பலிகடாவாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக அரசின்
புதிய தலைமை செயலர் யார்?  நழுவி ஓடும் மூத்த அதிகாரிகள்!

தமிழக அரசின் தலைமை செயலராக பதவி வகித்து வரும், சண்முகத்தின் பதவி காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவுக்கு வரும் நிலையில், புதிய தலைமை செயலராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், புதிய பொறுப்பை ஏற்று பலிகடாவாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விரும்பவில்லை என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகத்தின் பதவி காலம், கடந்த ஜூலையுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் முதல், அக்டோபர் வரை, மூன்று மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சண்முகத்தின் பதவி காலத்தை, நவம்பர் முதல், ஜனவரி வரை, மேலும் மூன்று மாதங்களுக்கு, மத்திய அரசு நீட்டித்துள்ளது.இந்நிலையில், ஜனவரிக்குப் பிறகு, புதிய தலைமை செயலராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி, இப்போது வட்டமிட துவங்கியுள்ளது. தமிழகத்தில், 22 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தலைமை செயலர் பொறுப்பேற்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பிப்ரவரி முதல், முடிவுகள் வெளியாகும் மே மாதம் வரையிலான, நான்கு மாத காலத்துக்கு, பலிகடா ஆக, எந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.சண்முகத்தின் பதவிக் காலத்தை, ஜனவரிக்கு பிறகு, மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க கோரி, பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக தொடர்பு கொண்டு, முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை வைப்பதே பிரச்னைக்கு தீர்வு என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தலைமை செயலராக தேர்வு செய்யப்பட தகுதியாக உள்ள, 22 அதிகாரிகளில், ஆறு பேர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெறுகின்றனர். நான்கு பேர் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே மீதமுள்ள, 12 பேரில் இருந்து தான், முதல்வர் இ.பி.எஸ்., ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதில், மீனாட்சி ராஜகோபால், சர்தார் ஜக்மோகன் சிங் ராஜு, ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர், போட்டியில் முதல் மூன்று இடங்களை
வகிக்கின்றனர். இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா, 2024ல் பணி ஓய்வு பெறுகிறார். எனவே, தமிழகத்தின் அடுத்த தலைமை செயலராக, அவர் நியமிக்கப்பட வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.ஆனால், புதிய அரசு ஆட்சி அமைந்தால், இவர் பதவி விலக நேரிடும் என்பதால், அவருக்கும் இதில் ஆர்வம் இல்லை என கூறப்படுகிறது.- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
29-அக்-202012:05:29 IST Report Abuse
mariyappangopinathan திரு மணி அவர்கள் சரியாக சொன்னார்கள். இந்த பதவி நீட்டிப்பு இவர்களுக்கு கொடுக்கப்படும் கூடுதல் போனஸ் போன்று தோன்றுகிறது. ஒரு வேளை இவர்கள் டார்கெட் முடியவில்லைன்னு ஒரு வாய்ப்பு கொடுக்குறாங்களோன்னு தோணுது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-அக்-202008:39:29 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இந்தமாதிரி அரசியல் வியாதிகளிடம் யார் மாட்டிக்கொள்வார்கள்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-அக்-202004:57:45 IST Report Abuse
Mani . V "...…ஆனால் சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் புதிய பொறுப்பை ஏற்று பலிகடாவாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரும்பவில்லை......." அப்படின்னா, "நோகாம நொங்கு திங்கணும்" அப்படித்தானே? இனிமேல் யாருக்குமே பதவி நீட்டிப்பே வழங்கக்கூடாது. நாற்பது வருடம் செய்ய முடியாததை பதவி நீட்டிப்பில் செய்து விடுவார்களாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X