காஷ்மீரில் புதிய நிலச்சட்டத்திற்கு எதிர்ப்பு; பிடிபி, தேசிய மாநாடு கட்சியினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

காஷ்மீரில் புதிய நிலச்சட்டத்திற்கு எதிர்ப்பு; பிடிபி, தேசிய மாநாடு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (18)
Share
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாடு கட்சி மற்றும் பிடிபி கட்சிகள் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில்,
PDP, JKNPP, New Land Laws, protests,Kashmir,காஷ்மீர்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாடு கட்சி மற்றும் பிடிபி கட்சிகள் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுதும் அமலில் உள்ள நிலச் சட்டங்களுடன் பொருந்தும்படி, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், நம் நாட்டின் குடிமகன் எவரும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், நிலம் வாங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது.


தொடர்ந்து போராடுவோம்:


மத்திய அரசின் இந்த நிலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிடிபி கட்சியினர், கட்சியின் பொதுச் செயலாளர் சுரிந்தர் சவுத்ரி தலைமையில் காந்திநகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிக்காட்ட, பேரணி நடத்தினர். முக்கிய சாலையில் பேரணி நடத்திய அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால், அமைதியாக கலைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து சுரிந்தர் சவுத்ரி கூறியதாவது: எங்கள் எதிர்ப்பு பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானது. காஷ்மீர் நிலம், நமது வருங்கால சந்ததியினருக்கு சொந்தமானது. ஆனால் புதிய நில சட்டத்தில், ஜம்மு மக்களை ஏமாற்றி அவர்களை, தவறாக வழிநடத்துகிறது. இதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsபா.ஜ., ஏமாற்றியது:


இதேபோல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியினர், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹர் தேவ் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹர் தேவ் சிங் கூறியதாவது: புதிய நிலச்சட்டம் ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீறும் செயல். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், காஷ்மீர் நிலம் மற்றும் மக்களின் வேலை வாய்ப்புக்கு, பா.ஜ., உறுதி அளித்திருந்தது. ஆனால், புதிய நிலச்சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், காஷ்மீர் மக்களை பா.ஜ., ஏமாற்றி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X