பொது செய்தி

இந்தியா

'ஆரோக்ய சேது' குறித்த கேள்விகள்: பதில் கோரும் தகவல் ஆணையம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :மத்திய அரசின், 'ஆரோக்ய சேது' செயலி தொடர்பான கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என, தேசிய தகவல் உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட 'ஆரோக்ய சேது' செயலியை, லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை, தேசிய தகவல் மையம்
'ஆரோக்ய சேது' குறித்த கேள்விகள்:  பதில் கோரும் தகவல் ஆணையம்

புதுடில்லி :மத்திய அரசின், 'ஆரோக்ய சேது' செயலி தொடர்பான கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என, தேசிய தகவல் உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட 'ஆரோக்ய சேது' செயலியை, லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை, தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியதாக, அதற்கான இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், சமூக ஆர்வலர் சவுரவ் தாஸ் என்பவர், ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியவர், அதற்கானஅனுமதி விபரங்கள், அதை உருவாக்குவதில் பங்கேற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் உட்பட பல்வேறு விபரங்களை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ்
தெரிவிக்கும்படி கோரினார்.

இரு மாதங்கள் ஆன நிலையிலும், இதுவரை அவருக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை.'ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியது தொடர்பானதகவல்கள் தங்களிடம் இல்லை' என, தேசிய தகவல் மையம் கூறியுள்ளது. இதையடுத்து, 'ஆரோக்ய சேது தொடர்பான கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதில் அளிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது' என, தேசிய தகவல் உரிமை ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து, உடனடியாக பதில் அளிக்கும்படி, பொது தகவல் பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய மின்- ஆளுமை பிரிவுக்கு, தேசிய தகவல் உரிமை ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
29-அக்-202010:48:58 IST Report Abuse
sahayadhas ஐயோ, ஒரே ஏமாத்தா இருக்கே. ஐயா வந்தா எல்லாம் சரி ஆயிரும் நினச்சதெல்லாம் தப்பா போச்சே.
Rate this:
Cancel
29-அக்-202005:57:16 IST Report Abuse
ஆப்பு ஆரோக்கிய சேத்து அச்சா ஹை... டவுன் லோட் கீஜியே.... கோரோனா சே பச்சாயி யே ந்னு லாம் தினமும் முழங்குனாங்களே... ஒரு வட நாட்டு நடிகர் கூட தனக்கு பாடி கார்டா அந்த ஆப்பை வெச்சுக்கிட்டாரே... இதெல்லாம் யாரை ஏமாத்த கோபால்?
Rate this:
Cancel
baygonspray - Aryan,ஈரான்
29-அக்-202004:09:07 IST Report Abuse
baygonspray இது தான் திறமை . யாரோ உருவாக்கியதை வச்சி விளம்பரம் தேடியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X