கோர்ட் செய்தி

தமிழ்நாடு

‛அனாதை போல் போலீசாரை நடத்தும் கட்சிகள்'

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
மதுரை : 'போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் எந்த கட்சியும் கேள்வி எழுப்பாது. அனாதைபோல் போலீசாரை நடத்துகின்றனர்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்தது.மதுரை அவனியாபுரம் கார்கி, அன்பு, முத்துராஜா. இவர்கள் அவா முத்துச்செல்வம் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகினர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கார்கி உட்பட 3 பேர், 'உறவினர் பூவம்மாள் இறந்தார். இறுதிச்
அனாதை, போலீஸ், கட்சிகள், கோர்ட்

மதுரை : 'போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் எந்த கட்சியும் கேள்வி எழுப்பாது. அனாதைபோல் போலீசாரை நடத்துகின்றனர்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்தது.

மதுரை அவனியாபுரம் கார்கி, அன்பு, முத்துராஜா. இவர்கள் அவா முத்துச்செல்வம் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகினர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கார்கி உட்பட 3 பேர், 'உறவினர் பூவம்மாள் இறந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோல் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் அவசர மனு செய்தனர்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர், 'இளஞ்செழியன், சிற்றரசு வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இருதரப்பிலும் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியன் கொலை செய்யப்பட்டார். தற்போதைய சூழலில் மனுதாரர்களுக்கு பரோல் அனுமதிக்கக்கூடாது,' என ஆட்சேபம் தெரிவித்தார்.


latest tamil news


நீதிபதிகள் உத்தரவு: பழிக்குப் பழியாக தொடர் கொலைகள் நடந்துள்ளதால், மனுதாரர்களுக்கு பரோல் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். குருபூஜை பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சூழலில் பரோல் அனுமதிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

நீதிபதி கிருபாகரன்: ரவுடிகளை வைத்துக் கொண்டு அரசியல் கட்சிகளை நடத்துகின்றனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியும் கேள்வி எழுப்பாது. அனாதைபோல் போலீசாரை நடத்துகின்றனர்.ஆனால், அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் போலீசார்தான் பாதுகாப்புத் தர வேண்டும். போலீசாருக்கு வேறு வேலை இல்லையா, ஓட்டுக்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குருபூஜையில் பங்கேற்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என அதிருப்தியுடன் கருத்தை வெளியிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Anbarasan - chennai,இந்தியா
29-அக்-202016:46:28 IST Report Abuse
R.Anbarasan ஒரு சில காவலர்கள் பொதுமக்களை அநாகரிகமாக அல்லவா நடத்துகிறார்கள். நேர்மையான காவல்துறை அதிகாரிக்ளுக்க்கு தலை வணங்குகிறேன்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-அக்-202015:09:05 IST Report Abuse
sankaseshan 1967 ஆம் வருடம் ஆரம்பித்த சனி தியமுக ரூபத்தில் . கட்சிக்காரர்களுக்கு போலீஸ் உட்பட ஏல்லா துறைகளிலும் Admk வுக்கும் இதில் பங்கு உண்டு .போலீஸ் அனாதையாக இருப்பது வியப்பில்லை அவமானம் வேண்டியதுதான் .
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
29-அக்-202013:06:03 IST Report Abuse
Dr. Suriya என்னங்க பன்றது எஜமான்.... தாக்குதல் நடத்துறவங்க எங்கள் தோழமை கட்சி இனத்தை சேர்ந்தவங்கள இருக்காங்களே... ஒட்டு வேணுமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X