பிப்.,29 கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி : இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்கும் சலுகையை அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஆறு மாதங்களுக்கு, கடனுக்கான வட்டி மட்டுமே, கடன்தாரர்களின்
Finance Ministry, Nirmala Sitharaman, FM Nirmala, நிர்மலா, நிதி அமைச்சகம்

புதுடில்லி : இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி வைக்கும் சலுகையை அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஆறு மாதங்களுக்கு, கடனுக்கான வட்டி மட்டுமே, கடன்தாரர்களின் கணக்கில் சேர்க்கப்படும். அந்த ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாத வட்டிக்கான வட்டி, மத்திய அரசு சார்பில், கடன்தாரர்களின் கணக்கில் செலுத்தப்படும்.

இதன்படி, இரண்டு கோடி ரூபாய் வரை, பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்ற அனைவரின் கணக்கில், சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகை செலுத்தப்படுவதை, நவ.,5க்குள் உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்த வட்டி மானியம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தாண்டு, பிப்.,29 நிலவரப்படி உள்ள கடன் நிலுவை அடிப்படையில், வட்டி மானியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில், பிப்.,29 முதல் ஆக.,31 வரையிலான காலத்தில் கடன் தவணை செலுத்தாதோருக்கு, வட்டி மற்றும் அதற்கான கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு, வித்தியாசத் தொகை, கணக்கில் வரவு வைக்கப்படும்.

மத்திய அரசின் கடன் தவணை சலுகையை பயன்படுத்தாமல், தொடர்ந்து வட்டி செலுத்தியவர்களுக்கும், இந்த வித்தியாசத் தொகை வரவு வைக்கப்படும் என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வட்டி மானியச் செலவு, 6,500 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chitra - Coimbatore,இந்தியா
29-அக்-202016:03:53 IST Report Abuse
Chitra சரி தான் வங்கி மேலாளர்தானே முடிவு கொடுப்பார்கள். அப்போ அவங்க சரியான ரிப்போர்ட் தரலைன்னா, RBI தட்டி கேட்பார்களா? இதை வங்கியில் கேட்டால் எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலைன்னு சொல்லுவாங்க. இந்த சலுகை கடன் வாங்கிய அனைவருக்கும் பயன்படணும். பாருங்க 2.67லட்சம் மானியம் இருக்குன்னு சொல்லி வீட்டு கடன் வாங்கி, இப்போ ஊராட்சிக்கு இன்னும் ஆர்டர் வரலைன்னு சொல்ராங்க
Rate this:
Maruthachalam A - Coimbatore,இந்தியா
29-அக்-202017:06:12 IST Report Abuse
Maruthachalam Aஆம், சரியாக சொல்கிறார், பாருங்க 2.67லட்சம் மானியம் இருக்குன்னு சொல்லி வீட்டு கடன் வாங்கி மானியம் வரலன்னு கேட்ட நீங்க தகுதிஇல்ல அப்படின்னு சொல்லறீங்க....
Rate this:
Cancel
VIDHURAN - chennai,இந்தியா
29-அக்-202014:18:01 IST Report Abuse
VIDHURAN இந்த வட்டி மீது வட்டி சமாச்சாரம் நிறைய பேருக்கு புரிவதில்லை. வங்கி பணியாளர்களே பலரே " சிஸ்டம் அப்படிதான் காட்டுது" ன்னு சொல்றாங்க. எவ்வளவு வட்டி போட்டார்கள் ? எவ்வளவு தள்ளுபடி பண்ணினார்கள் என்றெல்லாம் கடைநிலை நுகர்வோருக்கு தெரியும் படி அரசு செய்யாவிட்டால், அரசியல் செய்யும் எதிரிகள் அதை நன்றாக உபயோகப்படுத்திக்கொள்வார்கள். ஒரு சாதாரண கஸ்டமருக்கு விளங்கக்கூடிய அளவில் ஒரு விளம்பரம் இந்தியன் பங்கேர்ஸ் அச்சொசியாஷன் கொடுத்தால் நல்லது.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
29-அக்-202011:41:52 IST Report Abuse
J.Isaac சாமி வரங்கொடுத்தாலும் பூசாரிகள் வரம் கொடுக்கமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X