பொது செய்தி

இந்தியா

சர்க்கரை குறித்த 'கட்டுக்கதைகள்': மத்திய அரசு கவலை

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்த, 'கட்டுக்கதைகள்' மற்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய உணவு துறை செயலர் சுதான்ஷு பாண்டே கூறியதாவது:எந்த ஒரு விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல், சர்க்கரை மற்றும் சர்க்கரை நுகர்வு பற்றி நிறைய கட்டுக்கதைகள் வருகின்றன. இந்த தவறான தகவல்கள், உண்மைத்
Sugar consumption, stagnant, India, myths, Government

புதுடில்லி : இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்த, 'கட்டுக்கதைகள்' மற்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய உணவு துறை செயலர் சுதான்ஷு பாண்டே கூறியதாவது:எந்த ஒரு விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல், சர்க்கரை மற்றும் சர்க்கரை நுகர்வு பற்றி நிறைய கட்டுக்கதைகள் வருகின்றன. இந்த தவறான தகவல்கள், உண்மைத் தகவல்களை விட வேகமாக பரப்பப்படுகின்றன.


தவறான புரிதல்:


எனவே, சர்க்கரை குறித்த விஞ்ஞான ரீதியிலான தகவல்களை வெளியே கொண்டுவர வேண்டும். அது, மக்களுக்கு சரியான முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.மேலும், இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்து, வெளிநாடுகளில் தவறான புரிதல்களும் இருக்கின்றன. இந்திய சர்க்கரை, பிரேசில் அல்லது தாய்லாந்து சர்க்கரை போன்று நல்ல சர்க்கரையாக இல்லை என்ற கருத்தும் இருக்கிறது.

இந்தியா, உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வு நாடாக இருந்தாலும், தனி நபர் நுகர்வு, பல நாடுகளை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது.நாட்டின் தனி நபர் சர்க்கரை நுகர்வு, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த மாற்றமும்இல்லாமல், 19 கிலோவாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.


latest tamil news




சரியான தகவல்:


இது, உலக சராசரியான, 23.50 கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில், தனி நபர் சர்க்கரை நுகர்வு, 60 கிலோவாக இருக்கிறது.நாட்டின், ஓராண்டுக்கான சர்க்கரை நுகர்வு, 2.5 - 2.6 கோடி டன்னாக உள்ளது. அதே சமயம் உற்பத்தி, 2.75 கோடி டன்னாக செப்டம்பருடன் முடிவடைந்த ஓராண்டில் உள்ளது. உற்பத்தி அதிகமிருப்பினும், நுகர்வு அதைவிட குறைவாகவே இருக்கிறது.

எனவே, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சமூக ஊடகங்கள் ஆகியவை, மக்களுக்கு அறிவியல் பூர்வமான, சரியான தகவல்களை வழங்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
29-அக்-202022:12:17 IST Report Abuse
madhavan rajan கிராமத்து மக்களில் பலர் சர்க்கரை என்பதை ஒரு ஆடம்பர பொருளாகவே பார்க்கின்றனர். அவர்கள் அதை உட்கொள்வது மிகவும் குறைவு. நகரத்து மக்கள் அதை அதிகம் பயன்படுத்தி கிராமத்தில் வசிப்போர்களுக்கும் சராசரியை அதிகரிக்க உதவுகிறார்கள்.
Rate this:
Cancel
Goto Ireland - Coimbatore,இந்தியா
29-அக்-202017:03:25 IST Report Abuse
Goto Ireland சர்க்கரை ஒரு விஷம். சர்க்கரையை குறைத்தால் ஆரோக்கியம் மேம்படும்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-அக்-202016:20:47 IST Report Abuse
Lion Drsekar "இந்தியாவின் சர்க்கரை நுகர்வு குறித்த, 'கட்டுக்கதைகள்' மற்றும் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது." இதனை ஆண்டுகளாக பெட்ரோலில் இருந்து எடுக்கும் எண்ணையை சமையலுக்கு வாசனை சேர்த்து ஒவ்வொரு பெயரில் எப்படி இப்போது சாராயத்தை விற்கிறார்களோ அப்படி சமையல் எண்ணையை விற்றார்கள் மக்களாகவே துன்பத்துக்கு ஆளான பின்பு உண்மையை அறிந்த உடன் இப்போது எந்த ஊடகங்களிலும் எந்த விளம்பரமும் இல்லை, எல்லோரும் செக்குஎண்ணைக்கு மாறிவிட்டனர், அதுபோல் சர்க்கரையால் வரும் கேட்டினை உணர்ந்து கிராமத்து இயற்க்கை மாறிவிட்டனர், எல்லோருக்கும் வியாபாரத்துக்காக மக்களின் உயிரை யாருமே மதிப்பதில்லை, நமக்கு நாமே என்று வந்ததால், இது போன்ற பின்விளைவுகள் , தீங்கு என்று தெரிந்தும் மக்களை மாற்ற முயற்சிப்பதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்தல் நலம், இல்லையென்றால் இது மத மாற்றம்போல் இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X