சென்னை: கட்சிக்கு நேற்று வந்து இன்று அதிகாரம் பண்ணும் உதயநிதியை, தி.மு.க.,வினரும், மக்களும் விரும்பவில்லை என 'ஐபேக்' குழு அறிக்கை தந்ததையடுத்து, உதயநிதியை அடக்கி வைக்க, திமுக கட்சி முடிவு செய்துள்ளது.
தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா, மாவட்டந்தோறும் நடக்கிறது. கரூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில நடந்த விழாவில், ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியின் படமும் இருந்தது. அதன் பின் கோவை, திருச்சி, தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடந்த விழாக்களில், உதயநிதியின் படம் இல்லை. தி.மு.க.,வின் தேர்தல் வியூக குழுவான, 'ஐபேக்' கொடுத்த அறிக்கை காரணமாக, உதயநிதியின் படம் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்தில் இருந்தே, கட்சிக்காக உழைத்து ஸ்டாலின் படிப்படியாக முன்னேறினார். ஆனால், கட்சிக்கு நேற்று வந்து, இன்று அதிகாரம் பண்ணும் உதயநிதியை, தி.மு.க.,வினரும், மக்களும் விரும்பவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் தான், முப்பெரும் விழா பேனரில், உதயநிதி படம் வேண்டாம் என அக்கட்சி முடிவு எடுத்துள்ளது. தேர்தல் வரை, உதயநிதியை அடக்கி வாசிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: டீக்கடை பெஞ்ச்
லிங்க்: www.dinamalar.com/splpart_detail.asp?Id=91
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE