பொது செய்தி

தமிழ்நாடு

'சென்னையில் ரூ.5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலச் சாலை'

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: ''சென்னையில், 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் தேசிய நெடுஞ்சாலை
Nitin Gadkari, Chennai,சென்னை, நிதின் கட்கரி

சென்னை: ''சென்னையில், 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சென்னையில், துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலை பணிகள், அடுத்தாண்டு துவங்கும். இதை, 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலமாக, துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, பயணியர் வாகனங்கள் பயன்பாட்டிற்கும், இந்த மேம்பாலம் உதவும்.


latest tamil newsசென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேம்பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு, சிமென்ட், ஜல்லி, மணல் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான, ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்வதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, நிதின் கட்கரி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
29-அக்-202019:41:35 IST Report Abuse
G.Kirubakaran மிக நல்ல திட்டங்கள். உடனடியாக செய்ய பட வேண்டியவை
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
29-அக்-202016:29:05 IST Report Abuse
babu ஒதுக்கீடும், கமிஷனும் மட்டும் அரசு திறமையாக கவனித்துக்கொள்ளுமாம்.துறைகள் மூலம் வேலை வாங்க மட்டும் தெரியாதாம். வரிப்பணத்தை நேரடியாக செலவிட்டால் கமிசனுக்கு பிரச்சனையோ?
Rate this:
Cancel
Elangovan M - Hyderabad,இந்தியா
29-அக்-202014:08:20 IST Report Abuse
Elangovan M The cost of 1 km of 8 lane road is Rs 1.0 crore. We can develop 5000 km of 8 lane roads or 10000 km of 4 lane roads or 20000 km of 2 lane roads. Why we put more pressure on infrastucture of Chennai. There are other industrial and commerce related cities in Tamil Nadu needs more infrastructure.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X