'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது'

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்தே, விங் கமாண்டர் அபிநந்தனை பாக்., ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக, பாக்., முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த, அபிநந்தன்(37). கடந்த ஆண்டு (2019) துவக்கத்தில், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் தாக்குதல்
Abhinandan,India,Pakistan,இந்தியா,பாகிஸ்தான்,அபிநந்தன்

இஸ்லாமாபாத்: இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்தே, விங் கமாண்டர் அபிநந்தனை பாக்., ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக, பாக்., முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த, அபிநந்தன்(37). கடந்த ஆண்டு (2019) துவக்கத்தில், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, 2019 பிப்ரவரியில், இந்திய விமானப் படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்தின. இதில், மிக் - 21 ரக விமானத்தில் சென்ற அபிநந்தன், பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதன் பின், பாக்., பகுதிக்குள், அவரது விமானம் விழுந்தது. அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் கைது செய்தனர். 60 மணி நேரத்துக்குப்பின், அவர் விடுவிக்கப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில், இந்தியாவின் தாக்குலுக்கு பயந்தே அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக, பாக்., முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார். இதனை பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக அவர் கூறியுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் கூறியதாவது: அபிநந்தனை கைது செய்த பின், அவசர கூட்டத்தை பாக்., கூட்டியது. இக்கூட்டத்திற்கு வர இம்ரான் கான் மறுத்துவிட்டார். கூட்டத்தில், பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கலந்து கொண்டார். அப்போது, தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லையெனில், இன்று இரவு (அன்றைய தினம்) 9 மணிக்கு, பாகிஸ்தானை இந்தியா தாக்கும் என பயத்துடன் கூறினார். அப்போது அங்கிருந்த பாக்., ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியது; அவரது கால்கள் நடுங்கியதை நான் கண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
29-அக்-202019:54:38 IST Report Abuse
Viswam இந்த மாசம் பாக்கி பசங்களுக்கு என்ன ஆச்சு ? ஒருத்தர் இந்தியா அன்னிக்கே போட்டு தள்ளியிருக்கும்ன்னு சொல்லறாரு, இன்னோருத்தர் புல்வாமா செஞ்சது பாகிஸ்தான்தான்னு சொல்லறாரு. எதோ நடக்க போவுது
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
29-அக்-202017:55:43 IST Report Abuse
Davamani Arumuga Gounder 41 கருத்துக்கள் என்று மேலே கண்டேன்.. இவ்ளோ பேர் கூறியுள்ளதை விடவா நம் தாயகத்தைப் பற்றி நான் கூறிவிடுவேன்? .. '' ஜெய்ஹிந்த்'' என்ற இந்த ஒரே ஒரு சொல் போதுமே என் கருத்தை கூற
Rate this:
Cancel
Priyan - Madurai,இந்தியா
29-அக்-202017:42:19 IST Report Abuse
Priyan அடக்கடவுளே அவர்களும் சப்பீஸ்கள் தானா. என்ன இருந்தாலும் உடன் பிறந்த பங்காளிகள் அல்லவா. உள்ளூர் போராளிகள் முகம் தெரியாத வாறு சற்று பெரிய மாஸ்க் அணிந்துகொள்ளவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X