மே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்| Dinamalar

மே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (9)
Share
கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபைக்கு இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவி வந்தவர்களால் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலில் சிக்கி, பா.ஜ., தவிக்கிறது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, அடுத்த ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.அதிருப்தியாளர்கள்இம்முறை, ஆளும் கட்சியான
BJP, WestBengal, பாஜக, மேற்குவங்கம்

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபைக்கு இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவி வந்தவர்களால் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலில் சிக்கி, பா.ஜ., தவிக்கிறது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, அடுத்த ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.


அதிருப்தியாளர்கள்


இம்முறை, ஆளும் கட்சியான திரிணமுலுக்கு, பா.ஜ., தான் சவால் கொடுக்கும் என, அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பா.ஜ.,வும், தேர்தல் பணிகளை இப்போதே துவக்கிவிட்டது.இந்நிலையில், மாநிலத்தில், பா.ஜ., வலுப்பெற்று வருவதையடுத்து, பல கட்சிகளிலிருந்தும் அதிருப்தியாளர்கள் விலகி, பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக ஆளும் திரிணமுல் காங்.,கில், மூத்த தலைவர்களாக இருந்த முகுல் ராய், சவுமித்ரா கான் உட்பட பலர், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.

இவர்கள், பா.ஜ.,வில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். இது, கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து வரும் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, கோஷ்டி பூசலாக வெடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், சவுமித்ரா கானுக்கு வாய்ப்பளிக்க, திரிணமுல் மறுத்தது. இதனால், பா.ஜ.,வில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யானார். மாநில இளைஞர் அணி தலைவராக உள்ள சவுமித்ரா கான், சமீபத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.


latest tamil news




முக்கியத்துவம்


இதில், திரிணமுல் காங்.,கிலிருந்து, பா.ஜ.,வில், இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இது, கட்சியில் பெரும் சலசலப்பபை ஏற்படுத்தியது.இதையடுத்து, சவுமித்ரா கான் அறிவித்த இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் ரத்து செய்யப்படுவதாக, மாநில தலைவர் திலீப் கோஷ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுமித்ரா கான், இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கட்சியில், புதிதாக சேர்ந்தவர்களுக்கும், பல ஆண்டுகளாக இருப்பவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

வெண்ணைய் திரண்டு வரும் நேரத்தில், தாழி உடைந்த கதையாக, இந்த கோஷ்டிப் பூசல், பா.ஜ., தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பா.ஜ., தலைமை, இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளது. ஆனால், பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. தேர்தல் நேரத்தில், இது, பா.ஜ.,வுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என, கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X