சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வனவிலங்குகளை காக்கும் உணரிகள்!

Added : அக் 29, 2020
Share
Advertisement
நவீன வனவிலங்கு பாதுகாப்பிற்கு, உணரிகளும், தொலைதொடர்பு கருவிகளும் மிகப் பெரிய உதவி யாக உள்ளன. இதற்கு வலுசேர்க்கும் வகையில், நெதர்லாந்திலுள்ள டுவெண்டி பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், சில புதுமை களை சோதித்து வருகின்றனர்.விலங்குகளுக்கு அணிவிக்கப்படும் வழக்கமான உணரிகள், அவற்றின் இருப்பிடத்தை மட்டுமே காட்டும்.இத்துடன் ஆக்சலரோ மீட்டர், கிரையோஸ்கோப் மற்றும் மேக்னடோ
வனவிலங்குகளை காக்கும் உணரிகள்!

நவீன வனவிலங்கு பாதுகாப்பிற்கு, உணரிகளும், தொலைதொடர்பு கருவிகளும் மிகப் பெரிய உதவி யாக உள்ளன. இதற்கு வலுசேர்க்கும் வகையில், நெதர்லாந்திலுள்ள டுவெண்டி பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், சில புதுமை களை சோதித்து வருகின்றனர்.

விலங்குகளுக்கு அணிவிக்கப்படும் வழக்கமான உணரிகள், அவற்றின் இருப்பிடத்தை மட்டுமே காட்டும்.இத்துடன் ஆக்சலரோ மீட்டர், கிரையோஸ்கோப் மற்றும் மேக்னடோ மீட்டர் போன்றவையும் பொருத்துவது, விலங்குகளை வனக் கடத்தல்காரர்களின் கொலைகாரப் பிடியிலிருந்து காப்பாற்றுவது எளிதாகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பல உணரிகளைக் கொண்ட கருவியை வன விலங்குகளின் கழுத்து, காது போன்ற பகுதிகளில் அணிவிக்க வேண்டும். அதன்பின் விலங்கின் அசைவுகள், நகர்வுகள், அவற்றின் வேகம் போன்ற வற்றில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், கருவி அந்த தகவல்களை சமிக்ஞைகளாக அருகாமையிலுள்ள மொபைல் அல்லது செயற்கைக்கோளுக்கு அனுப்பிவிடும்.

அந்த சமிக்ஞைகளை, செயற்கை நுண்ணறிவு கணினி கொண்டு அலசினால், கடத்தல்காரர்களை விரைந்து சென்று பிடித்து விடலாம் என, நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X