சென்னை; தி.மு.க., கூட்டணியில காங்கிரசுக்கு, இந்த முறை அதிகபட்சம், 20 சீட் வரைதான் கொடுப்பாங்கற தகவல், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வரைக்கும் போயிடுச்சு... அதனால, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கிற மாதிரி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, நடிகர் கமலுக்கு அழைப்பு விடுத்திருக்காரு, அழகிரி... ஒருவேளை கமல் வந்தால், ஒத்த எண்ணமுடைய கட்சிகளெல்லாம் சேர்ந்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கலாம் அல்லது பிரிந்து போய், தனி அணியாக செயல்படலாம்னு, அழகிரி நினைக்கிறாரு...!
டில்லிக்கு பறந்த அதிகாரியால் ஆளும்கட்சி பதற்றம்
தமிழகத்துல நடந்த முறைகேடுக்கு துணைபோகாம, விருப்ப ஓய்வுல சென்றவர், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு... அதாவது, தமிழகத்துல கிராமங்களுக்கு அதிவேக இண்டர்நெட் கனெக்ஷன் தரும் மத்திய அரசின் திட்டத்துல முறைகேடு செய்ய முயற்சி நடந்தது. அதுக்கு சந்தோஷ்பாபு ஒத்துவரலைன்னதும், நெருக்கடி கொடுத்ததால அவரு விருப்ப ஓய்வுலபோயிட்டாரு... அவரு தான் இப்ப, டில்லிக்குப் போய் சிலரை சந்திச்சுட்டு திரும்பியதை கேள்விப்பட்டு, அரசுத் தரப்புல பதற்றமா இருக்காங்க...!
திருமாவால் தி.மு.க.,வுக்கு தர்மசங்கடம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமீபத்துல பெண்களை பத்தி கீழ்தரமா பேசிய விவகாரத்தை கையில எடுத்திருக்கிற, பா.ஜ.,தரப்பு, பிரச்னையை, தி.மு.க.,வை நோக்கி திருப்பி விட்டுட்டாங்க ... இதனால, தி.மு.க.,வுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்கு.தேர்தல் நெருக்கத்துல கூட்டணியில இருக்கிற திருமாவளவனால, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துட்டு வர்றது, தங்களையும் பாதிக்குமோன்னு, தி.மு.க.., தரப்பு கவலையில இருக்கு...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE