பொது செய்தி

இந்தியா

டில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் அரசு உத்தரவை மீறி காற்றுமாசு ஏற்படுத்தினால், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா,
Delhi, AirPollution, Fine, NewLaw, Ordinance, டில்லி, காற்றுமாசு, அபராதம், சட்டம், மத்திய அரசு

புதுடில்லி: டில்லியில் அரசு உத்தரவை மீறி காற்றுமாசு ஏற்படுத்தினால், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‛அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து, சிறந்த முறையில் கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது,' என தெரிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-அக்-202023:40:57 IST Report Abuse
தமிழவேல் இதுபோல செய்யக்கூடாதுன்னு சட்டம் போட்டு எந்த பிரயோசனமும் இல்லை. அதுக்கும் முன்னால, எதனால செய்றானுவோ, அதுக்கு வேறு வழி என்ன என்று ஆராய்ந்து, அதற்கான வழியை முதலில் ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சட்டங்களை மதிப்பார்கள். ஒரு ஏழைவிவசாயி எரிக்கின்றான் என்று 1 கோடி அபராதம் போட்டால், அவனிடம் இருந்தால்தானே கொடுக்கப் போகின்றான்.கீழே டாக்டர் கூறுவது போல லஞ்சம் தான் செழிக்கும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-அக்-202013:23:50 IST Report Abuse
Ramesh Sargam மிகவும் தாமதமான நடவடிக்கை. போகட்டும், அதையாவது நேர்மையாக நிறைவேற்றுவார்களா? சந்தேகம்தான்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-அக்-202013:03:30 IST Report Abuse
Lion Drsekar அதிகமாக அபராதம் விதித்தால்தான் அந்த அந்த துறைகளுக்கு அதிக அளவில் மாமூல் மிக அதிக அளவில் கிடைக்கும், அந்த நாள் முதல் இந்த நாள் வரை லஞ்சம் மாறவில்லை, லஞ்சத்தின் தொகைதான் காலத்துக்கே ஏற்ப அதிகரித்துக்கொண்டே போகிறது, எந்த குற்றமும் குறைந்ததாக சரித்திரமே இல்லை மாறாக சிறைச்சாலைகள், நீதிமன்ற வழக்குகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பெருகிக்கொண்டே போகிறது, தவறு செய்பவர்கள் நாட்டின் இறையாண்மையை நினைத்தால் , மக்களின் வாழ்வாதாரத்தை நினைத்தால் எந்த யாவருமே செய்யமாட்டார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X