அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ரஜினி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தகுந்த நேரத்தில், அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில், வெற்றிடம் ஏற்பட்டுள்ளது' எனக்கூறிய ரஜினி, 2017 இறுதியில், அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, உலகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார்.
Rajinikanth, rajinikanth,அரசியல்நிலைப்பாடு, ரஜினி, ரஜினிகாந்த், டுவிட்டர்,

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தகுந்த நேரத்தில், அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில், வெற்றிடம் ஏற்பட்டுள்ளது' எனக்கூறிய ரஜினி, 2017 இறுதியில், அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, உலகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்திய அவர், தேர்தலுக்காக பகுதி வாரியாக, பூத் ஏஜென்ட்களையும் நியமித்தார். இந்நிலையில், நேற்று ரஜினி எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்து டுவிட்டரில் ரஜினி வெளியிட்ட பதிவு: என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவி கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
30-அக்-202010:21:57 IST Report Abuse
Chockalingam உண்மையிலேயே ரஜினி ரசிகர்களும் அபிமானிகளும் மிக, மிக, மிக ... சகிப்புத் தன்மை உடையவர்கள்
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
30-அக்-202009:05:23 IST Report Abuse
Sukumar Talpady இவர் இன்னும் ஒரு திடமான நிலைப்பாட்டுக்கு வரவில்லை . தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள்தான் இருக்கிறது . இப்பொழுதே தன்னுடைய ஆரோக்யம் சரி இல்லை என்கிறார் . இப்பொழுதே கட்சி ஆரம்பித்தால் தானே தேர்தலில் வேலை செய்ய முடியும் . இன்னும் குழப்பமாகவே இருந்தால் , இவர் அரசியலில் வருவது சந்தேகம் தான் . கடைசி நேரத்தில் எதையாவது சொல்லி கையை விரித்து விடுவார் .
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
29-அக்-202023:51:37 IST Report Abuse
Amirthalingam Shanmugam மாப்பிள்ளை அவருதான் ஆனா அவரு போட்டுருக்க சட்டை என்னோடது.இவர் அறியாமலேயே அறிக்கையை யாரோ உலவ விட்டார்களாம் ஆனால் மருத்துவ விபரங்கள் மட்டும் உண்மையாம். இன்னும் எத்தனை படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி கொண்டுயிருக்காரோ பாவம் வருவேன் வருவேன் என்று சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X