கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது: உயர்நீதிமன்றம் கேள்வி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வை ஏன் நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதுஇறுதி செமஸ்டரில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில்
செமஸ்டர்தேர்வு, யுஜிசி,  சென்னைஉயர்நீதிமன்றம்,

சென்னை: சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வை ஏன் நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

இறுதி செமஸ்டரில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் பல்கலை மானியக்குழு (யுஜிசி) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதி செஸ்டர் தேர்வை ஆன்லைன் அல்லது தனிமனித விலகல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாக தேர்வு நடத்த அனைத்து பல்கலைகழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை செப்., 30க்குள் நடத்தி முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இறுதி செமஸ்டர் தேர்வுகள் அவசியமானது. தேர்வு நடத்த இயலாவிட்டால், கால அவகாசத்தை செப்.,30க்கு மேல் நீட்டிக்க கோரலாம் எனவும்உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, யுஜிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் தேர்வுகளை ரத்து செய்ததில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வை ஏன் நடத்த முடியாது எனக்கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக உயர்கல்வித்துறை யுஜிசி பதிலளிக்க நவ.,20 வரை அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sukkan galpa - BSB,புருனே
30-அக்-202007:21:48 IST Report Abuse
sukkan galpa judges should not have right to suggest anything as they feel against policy decisions. Most of the time they behave like leftists.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
29-அக்-202020:29:35 IST Report Abuse
S Bala தினமும் எட்டு மணி நேரம், வருடத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் நீதிமன்றங்களை ஆன் லைனில் நடத்தினால் அத்தனை வழக்குகளையும் இரண்டே வருடத்தில் முடித்துவிடலாம்....
Rate this:
Cancel
29-அக்-202019:48:54 IST Report Abuse
ஆப்பு நீங்களும் வழக்குகளை ஆன்லைனிலேயே நடத்திக் காட்டுங்க எசமான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X