சென்னை: சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வை ஏன் நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
இறுதி செமஸ்டரில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் பல்கலை மானியக்குழு (யுஜிசி) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதி செஸ்டர் தேர்வை ஆன்லைன் அல்லது தனிமனித விலகல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாக தேர்வு நடத்த அனைத்து பல்கலைகழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை செப்., 30க்குள் நடத்தி முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இறுதி செமஸ்டர் தேர்வுகள் அவசியமானது. தேர்வு நடத்த இயலாவிட்டால், கால அவகாசத்தை செப்.,30க்கு மேல் நீட்டிக்க கோரலாம் எனவும்உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, யுஜிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் தேர்வுகளை ரத்து செய்ததில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வை ஏன் நடத்த முடியாது எனக்கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக உயர்கல்வித்துறை யுஜிசி பதிலளிக்க நவ.,20 வரை அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE