அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை: கொரோனாவிடம் தோற்ற தலைநகர் சென்னை, ஒரேயொரு நாள் பெய்த கனமழைக்கும் தோற்று நிற்பதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வடககிழக்கு பருவமழை துவங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், அலுட்சியம் காரணமாக, இன்று ஒரு நாள் மழையை கூடதாங்க முடியாமல், சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம்
திமுக, ஸ்டாலின், மழை, சென்னை

சென்னை: கொரோனாவிடம் தோற்ற தலைநகர் சென்னை, ஒரேயொரு நாள் பெய்த கனமழைக்கும் தோற்று நிற்பதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வடககிழக்கு பருவமழை துவங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், அலுட்சியம் காரணமாக, இன்று ஒரு நாள் மழையை கூடதாங்க முடியாமல், சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்து கொண்டுள்ளனர்.

சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஆனால், அடைந்த தோல்விகளில் கூட பழனிசாமி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இப்போது கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோ, 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ, எதையும் எதிர்கொண்டு மக்களை காப்பாற்றும் அடிப்படை அருகதையை பழனிசாமி அரசு இழந்து நிற்கிறது. தேங்கிய நீர் குளங்கள் போல் சாலைகளில் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்து போய் விட்டது.

இதுதவிர சென்னை புறநகரிலும் கனமழை பெய்கிறது. இன்னும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கி அதை செலவிடாமலேயே சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குகிறது. கொரோனாவில் தோற்ற சென்னை மாநகரம் ,இப்போது, ஒரேயொரு நாள் கனமழைக்கு தோற்றுநிற்பதை கண்டும், தேங்கி கிடக்கும் தண்ணீரை பார்த்தும் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil newsவிரட்டி அடிக்கப்படும்

திமுகவில் மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் மு.காந்தியின் படத்தை திறந்து வைத்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகள் பல இன்னல்களுக்கு உள்ளாகி தவிக்கிறார்கள். கொரோனாவும் அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. கொரோனா காலத்திலும் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் போட்டவர் பழனிசாமி. கொரோன காலத்திலும் மின் கட்டணத்தை ஈவு இரக்கமில்லாமல் வசூலித்து அதை குறைக்க முடியாது என நீதிமன்றத்தில் வாதிட்டவர் பழனிசாமி. பழனிசாமி ஆட்சி தமிழகத்திற்கு துரோகம் செய்த ஆட்சி. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்கு போகும் நாள் தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - dhaka,வங்கதேசம்
30-அக்-202007:32:23 IST Report Abuse
Kannan இது ரொம்ப ஓவர் . அரசியல்ல இறங்காமல் வீர வசனம் பேசினவரை அரசியல்ல பல பதவியில் இருந்தவருடன் ஒப்பிட்டு பேசுவது அழகல்ல . எந்த கட்சியாக இருக்கட்டும் .ஸ்டாலின் என்றைக்குமே தேர்தல்ல பயந்து ஓடியது இல்லை .
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-அக்-202023:25:20 IST Report Abuse
Rajagopal பாரதியார் பாட்ட மாத்தி துக்ளக்ல எழுதியிருந்தாங்க, தலைவைர் முக கூவத்த சுத்தம் செய்றேன்னு கெளம்பினப்ப - "வெள்ளிப் பண மலையின் மீதுலாவுவோம், அடித்தது முழுதும் ஏப்பம் விடுவோம். பள்ளித் தலமனைத்தும் பிரச்சாரம் செய்குவோம், எங்கள் தமிழகம் இதுவென்று தலை குனிவோம். வாரியம் செய்வோம், ஒரு காரியம் செய்யோம், உண்மைகள் சொல்வோரை பல வன்மைகள் செய்வோம், எங்கள் தமிழகம் இதுவென்று தலை குனிவோம்". இதுதான் திமுக. குழியைத் தூண்டுவார்கள். அதில் தடுக்கி விழுந்தவனையே குற்றம் சாற்றுவார்கள். சென்னையில் எரிகளுக்குள்ளெல்லாம் வீடு கட்ட பெர்மிட் கொடுத்து பணம் செய்தவர்கள் இந்த திமுக பிரமுகர்கள். இப்போது மழை வந்தால் ஏரிகள் நிரம்பி, சமையல் கட்டிலேயே குடிநீர் நேராக வரும்படி செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட காலம் பஞ்சத்தால் ஊர் வாடியது. மழை மேகம் மேலே போனால் மக்கள் கூரைகளில் நின்று ஏக்கத்தோடு பார்த்தார்கள். மின்சாரம் பாதி நேரம் வராமல், கை விசிறியை வாங்கி வீசிக்கொண்டார்கள். அப்போது தளபதி அவர்கள் வட சென்னையில் பெண்களைத் துரத்தி சுவைக்கும் வேலையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் அவருக்கு இந்த அட்டூழியம் எல்லாம் பிராமணர்களால் வந்தது என்ற எண்ணம் வந்திருக்கிறது.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
29-அக்-202023:23:28 IST Report Abuse
Mohan 'ORU NAAL MAZHAIKKU THOTRA CHENNAI "_ORU NAAL ELECTIONIL THORKUM STALIN.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X