வாஷிங்டன்:அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராக இந்திய மற்றும் ஜமைக்காவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் முன்நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அரசை தீவிரமாக சாடி பேசி வருகிறார். சோஷியலிச கொள்கை கொண்ட கமலா ஹாரிஸ், தான் அமெரிக்கர் என்பதில் பெருமை கொள்வதாகவும் அதனாலேயே தான் குடியரசு கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பதாகவும் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கர்களின் வாக்குகளை கவர கமலா ஹாரிஸ் ஒரே நாளில் பல மாகாணங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அரிசோனா மாகாணத்தில் கடந்த புதன் அன்று நடந்த தேர்தல் ஊர்வலத்தில் பேசிய கமலா ஹாரிஸ், தன்னுடைய சோஷியலிச கொள்கை குறித்து குடியரசு கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து விமர்சிப்பதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தான் ஒரு பெருமைமிக்க அமெரிக்க குடிமகள். டிரம்ப் அமெரிக்கர்களின் உயிருடன் விளையாட கூடாது எனத் தெரிவித்த கமலா ஹாரிஸ், தங்கள் கட்சி, மீது உள்ள பற்று காரணமாக தங்கள் கூட்டத்தில் சமூக விலகலுடன் நின்று முக கவசம் அணிந்து தங்கள் உரையை கேட்குமாறு அறிவுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்திய கமலா ஹாரிஸ், சமூக இடைவெளிவிட்டு வரிசையில் வருவதில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE