பேஸ்புக் தலைமை மாற்றம்: காங்., வரவேற்பு

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் செயல்படுவதாக குற்றம்சாட்டி வந்த காங்., அதன் கொள்கை தலைவர் அங்கி தாஸ் ராஜினாமா செய்த பிறகு தலைமை மாற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளது.அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் இந்தியா நிறுவனம் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் நேர்காணல் நடத்தி
DemonstrateNeutrality, Congress, Welcomes, FacebookIndia, LeadershipChange, பேஸ்புக், மாற்றம்,காங்கிரஸ், வரவேற்பு

புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் செயல்படுவதாக குற்றம்சாட்டி வந்த காங்., அதன் கொள்கை தலைவர் அங்கி தாஸ் ராஜினாமா செய்த பிறகு தலைமை மாற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளது.

அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் இந்தியா நிறுவனம் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் நேர்காணல் நடத்தி அத்தகவலை பெற்றதாக கூறியிருந்தது. அதில் பா.ஜ., தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கொள்கை தலைவர் அங்கிதாஸ் முட்டுக்கட்டை போட்டதாகவும், நடவடிக்கை எடுத்தால் பேஸ்புக்கின் வணிகத்தை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியிருந்தது. இச்செய்தி அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.


latest tamil news



இது தொடர்பாக அப்போதே காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேஸ்புக் சி.இ.ஒ.,விற்கு கடிதம் எழுதினார். அதில், எங்கள் கட்சியினர் உயிர் தியாகம் செய்து பெற்ற உரிமைகளையும், மதிப்பீடுகளையும் உங்கள் நிறுவனம் தடுக்க முயற்சிக்கிறது. பேஸ்புக் இந்தியா தலைமைக் குழுவின் செயல்பாடுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும். விசாரணை முடியும் வரை புதிய அணியை நியமிக்க வேண்டும்.” என கோரியிருந்தார். இந்த பின்னணியில் தான் அதன் கொள்கை தலைவர் அங்கி தாஸ் பதவி விலகி உள்ளார்.


latest tamil news


இதனை வரவேற்றுள்ள கே.சி.வேணுகோபால், “ஒரு தலைவரை மாற்றுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது. நிறுவன செயல்முறைகளை முழுமையாக மாற்றியமைத்து நடுநிலைமையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார். தனிநபர் விருப்பம் மற்றும் அரசியல் சாய்வுகளால் பேஸ்புக் தவறாக பயன்படுத்தப்படாததை உறுதி செய்ய வேண்டும். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பரப்பப்படும் வெறுப்பு கருத்துக்கள், போலி செய்திகள் போன்றவற்றை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
29-அக்-202020:10:24 IST Report Abuse
Truth Triumph கம்யூனிஸ்ட், காங்கிரஸ் , திமுக கை கூலிகள் தான் பெரும்பாலான ஊடகங்களை இயக்குகிறர்கள் , இதில் பேஸ் புக் , த்விட்டேர் போன்றவைகளும் இவர்கள் ஆதிக்கம் பரவுகிறது ... ஊடகங்களின் மூலமாக மக்களின் மனதில் விஷம் விதைப்பவர்கள் ... அயல் நாட்டு ப்ரோக்கர்கள் நம் நாட்டை காட்டி கொடுப்பவர்கள் ...
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
29-அக்-202019:15:46 IST Report Abuse
dina இந்த மாதிரி டுப்ங்க்ஹுர் வேலை எல்லாம் செய்து ஒட்டு அள்ளலாம் என்று நினைக்கிறது ஆனால் நடக்காது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-அக்-202018:41:12 IST Report Abuse
Lion Drsekar இந்த குடும்பம் வரவேற்கிறது என்றால் சிந்திக்க வேண்டி இருக்கிறது, பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X