மிசோரம் மாநிலத்தில் முதல் கொரோனா பலி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020
Share
Advertisement
ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நிலவரப்படி, நாடு முழுவதும் 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 517 பேர் உயிரிழந்தனர். சில மாநிலங்களில் கொரோனா
Mizoram, Covid-19, FirstDeath, மிசோரம், கொரோனா, பாதிப்பு, முதல், உயிரிழப்பு

ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நிலவரப்படி, நாடு முழுவதும் 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 517 பேர் உயிரிழந்தனர். சில மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநிலத்தில் இதுவரை 2,607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை உயிரிழப்பு இல்லாமல் இருந்த அம்மாநிலத்திலும் முதன்முறையாக ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.


latest tamil news


மிசோரம் மாநிலம் ஐசால் பகுதியை சேர்ந்த 62 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, அவர் ஷோரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 10 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்து உள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதய நோய் பிரச்னை இருந்ததாக ஷோரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X