பொது செய்தி

இந்தியா

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்: பிரதமர் இரங்கல்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இன்று காலமானார். அவருக்கு வயது 92.இன்று காலை, ஆமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனைக்கு, மாரடைப்பு காரணமாக மயங்கிய நிலையில் அவர் அழைத்து வரப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நண்பகல் 11:55 மணியளவில் அவர் காலமானார். கொரோனா காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என டாக்டர்கள்
கேசுபாய்படேல், குஜராத், காலமானார்,

ஆமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

இன்று காலை, ஆமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனைக்கு, மாரடைப்பு காரணமாக மயங்கிய நிலையில் அவர் அழைத்து வரப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நண்பகல் 11:55 மணியளவில் அவர் காலமானார். கொரோனா காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர், குணமடைந்த கேசுபாய் படேல், இன்று காலமானார்.

கேசபாய் சவ்தேஷ்பாய் படேல் என்ற இயற்பெயர் கொண்ட அவர், குஜராத் முதல்வராக 1995ம் ஆண்டில் சில மாதங்கள் பதவி வகித்தார். பின்னர், 1998 முதல் 2001 வரையும் முதல்வராக இருந்தார். இதன் பிறகு, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். கடந்த 2012ம் ஆண்டு கேசுபாய் படேல், பாஜ.,வில் இருந்து விலகி குஜராத் பரிவர்தன் என்ற கட்சியை துவக்கினார். பின்னர், அதனை பா.ஜ.,வில் இணைத்தார்.


இரங்கல்


latest tamil news


கேசுபாய் படேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: நமது மரியாதைக்குரிய கேசுபாய் படேல் காலமானார். இதனால் எனக்கு கடும் வேதனையும், சோகமும் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்ட மிகப்பெரிய தலைவர். அவர் தனது வாழ்க்கையை, குஜராத்தின் வளர்ச்சிக்கும், மாநிலம் வளம் பெறவும் அர்ப்பணித்தார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X