சமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.,வுக்கு அல்லது வேறு கட்சிக்காவது கூட ஓட்டுப்போடுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அங்கு எதிரெதிர் பக்கத்தில் இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணி
mayawathi, mayawati, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, பாஜ

லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.,வுக்கு அல்லது வேறு கட்சிக்காவது கூட ஓட்டுப்போடுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அங்கு எதிரெதிர் பக்கத்தில் இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. இதனால், கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி தலைவர் அகிலேசை சந்தித்து பேசினர். அவர்கள் விரைவில், சமாஜ்வாதியில் சேரப்போவதாக தெரிவித்ததுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது எனவும் கூறியுள்ளனர். இது அந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.


latest tamil news



இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: உ.பி., மேலவை தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க நாங்கள் பா.ஜ.,வுக்கு கூட ஓட்டுப்போடுவோம் அல்லது வேறு எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடுவோம். ராஜ்யசபா தேர்தல், எதிர்காலத்தில் உ.பி.,யில் நடக்கும் மேலவை தேர்தலில் சமாஜ்வாதியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துவோம். இதற்காக பா.ஜ.,வுக்கு கூட ஓட்டுப்போடுவோம். சமாஜ்வாதியின் வேட்பாளரை தோற்டிக்கும் வகையில், எந்த கட்சி வேட்பாளர் செயல்பட்டாலும், அவர்களை பகுஜன் சமாஜ் ஆதரிக்கும்.

கடந்த 1995ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதுநான் செய்த மிகப்பெரிய தவறு. கடந்த லோக்சபா தேர்தலில் அகிலேசுடுன் நாங்கள் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parsath - dam,சவுதி அரேபியா
30-அக்-202008:52:37 IST Report Abuse
parsath நீயலாம் ஒரு ஆளு
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
30-அக்-202007:22:28 IST Report Abuse
iconoclast இனி எந்த காலத்திலும் நீ முதலமைச்சராக முடியாது
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
30-அக்-202006:20:50 IST Report Abuse
Elango இவரை நம்புவது பிஜபிக்கு நல்லதல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X