பொது செய்தி

தமிழ்நாடு

7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள்
7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அரசாணை, வெளியீடு

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.


latest tamil news
இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கவர்னர் இன்றுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்று இம்மசோதா தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தின் வழியாக ஒரு ஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேர முடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எழுதிய கடிதத்தில் சட்டம் குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவை எனவும், இதனை அமைச்சர்கள் குழுவிடம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு வழி வகை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசாணை அரசு விளக்கம்


அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்ட மசோதா கவர்னரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு துவங்கியதால் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் கவர்னர் முடிவை அறிவிக்க கோரி உள்ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவுAdvertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Gaborone,போஸ்ட்வானா
01-நவ-202013:15:39 IST Report Abuse
Rajan வரவேற்கத்தக்கது. அனால் மறுபுறம், தமிழ் நாட்டில் சந்தை எதிர்பார்ப்புக்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்றாற்போல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏன் கல்வி தரத்தை வளர்க்கவில்லை / உயர்த்தவில்லை. யார் அதனை தடுத்தது. வருடத்திற்கு நூற்று அம்பது நாள் விடுமுறையா, அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிகராக இல்லாமல் தரம் குறைந்த பயிற்றுவித்தல் முறையா, அல்லது அரசு பள்ளியாசிரியர்கள் தங்கள் தனி டுஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது/ (சிலர்) உபதொழில்களில் கவனம் செலுத்துவதாலா. மேலும் ஓராண்டாக யோசிக்காமல் கடைசி நிமிடத்தில் அட்மிஷன் ஆரம்பமாகும் பொழுது ஒரு திட்டத்திற்கு உடனடியாக ஒரு அழுத்தத்துடன் ஒப்புதல் கேட்பதற்கான காரணமும் புரியவில்லை.
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
29-அக்-202022:03:57 IST Report Abuse
Radj, Delhi அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்ட மசோதா கவர்னரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும் தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்ததற்கு வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் அவர்கள் அம்மாவின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார். சூப்பர். அம்மா மாதிரி தில்லாக தமிழக முதல்வர் இருப்பதில் மிக்க சந்தோசம். அரசு பலல்லியில் படிக்கும் பல நூறு மாணவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தமிழக முதல்வர் செயற்கரிய செயல் செய்ததை பல நூறு வருடம் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமியின் புகழ் என்றேன்றும் நினைவில் கொள்வார்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
29-அக்-202020:47:38 IST Report Abuse
ஆரூர் ரங் நாளையே இந்த அரசாணை செல்லாதுன்னு தனியார் பள்ளி( திமுக சார்பு) உரிமையாளர் சங்கம் கோர்ட்டுக்குப் போகும். செல்லாதுன்னு தீர்ப்பும் வரும். அதைவைத்து சுடலை மீண்டும் அரசியல் செய்வான்.
Rate this:
29-அக்-202022:03:18 IST Report Abuse
பாமரன்ரங்கிடு உமக்கு கழுதை வயசாகியிருக்கலாம்... இதே உரிமையோடு மோ(ச)டியையும் அவன் இவன்னு எழுத தைரியம் இருக்கா...🙄🙄 உம்மை மாதிரி ஆட்களை கண்டமேனிக்கு இந்த தளத்தில் வாந்தி எடுக்க அனுமதிக்கும் ஸார்வாள் மேல்தான் முதல் தவறே...😠 (எதுவும் தப்பா இல்லைன்னாலும் கத்திரி போட்டாச்சா...🤔)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X