ஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிப்பு| Dinamalar

ஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிப்பு

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020
Share
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் குணமாவோரது எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் தற்போது உலக நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் குணமாவோரது எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் தற்போது உலக நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.



latest tamil news



நிலைமை இவ்வாறு இருக்க, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வீரியம் அதிகரிக்கக்கூடும் என கூறியுள்ளனர். ஆகவே வரும் டிசம்பர் மாதம்வரை சமூக விலகலை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தடுப்பு மருந்து சோதனை ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலி எண்ணிக்கையை தவிர்க்க சமூக விலகலை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிற ஐரோப்பிய நாடுகள்போல ஜெர்மனியில் இன்னும் ஆடம்பர விடுதிகள், பார்கள் திறக்கப்படவில்லை. ஜெர்மனியின் 16 மாகாணங்களில் இன்னும் கட்டாய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனியில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 764 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்ட தாகவும் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இன்னும் 4 மாதங்களுக்கு ஜெர்மனியில் குளிர்காலம் நடிக்க உள்ள நிலையில் இதனை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டால் குழுவில் இருந்து தப்பிவிடலாம் என தெரிவித்துள்ளார். ஏஞ்சல் அரசு இல்லாத ஒன்றை பூதாகரமாக்கி வருகிறது என தீவீர வலதுசாரி எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என என்பதில் உறுதியாக உள்ளார் ஏஞ்சலா.
தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவரான அலெக்சாண்டர் கமெண்ட் ஏஞ்சலா மெர்கல் அரசின் அதிக கட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விமர்சித்துள்ளார். சாலைகளில் விதிக்கப்படும் அதீத வாகன கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறுகையில் இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை தேவை இல்லை எனவும் இது பொதுமக்களுக்கு தேவையில்லாத பீதியை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
ஆனால் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து கட்டுப்பாடுகளை இன்னும் நான்கு மாதத்திற்கு கடைபிடிக்க குடிமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X