பாரீஸ்: பிரான் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்தியால் குத்தி கொலை
பிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கிய பயங்கரவாதி, மத முழக்கங்கங்களை எழுப்பியதாக, நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளதால். இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மோடி கண்டனம்
பிரான்சில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ளதாவது: பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடூரமானது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் , பிரான்ஸ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா பிரான்சிற்கு துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE