இந்தியாவுக்கு பயந்தே அபிநந்தன் விடுவிப்பு: பாக்., ஒப்புதல்

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்தே, இந்திய விமானப்படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தனை, இம்ரான் கான் அரசு ஒப்படைத்தது' என, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு, பிப்., 14ல், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய
இந்தியா,அபிநந்தன், விடுவிப்பு, பாக்., ஒப்புதல்

இஸ்லாமாபாத்: 'இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்தே, இந்திய விமானப்படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தனை, இம்ரான் கான் அரசு ஒப்படைத்தது' என, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு, பிப்., 14ல், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்., 26ல், இந்திய விமானப் படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தின.


பாராட்டு



இதில், 'மிக் 21' ரக விமானத்தில் சென்ற அபிநந்தன், 37, பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போது, பாக்., பகுதிக்குள், அவரது விமானம் விழுந்தது. அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் கைது செய்தனர். 60 மணி நேரத்துக்குப் பின், அவர் விடுவிக்கப்பட்டார்.நட்புறவு மற்றும் மனிதநேய அடிப்படையில், அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக கூறி, பாக்., பிரதமர் இம்ரான் கானை, அப்போது, நம் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் பாராட்டினர்.

ஆனால், இந்திய ராணுவத்தின் தாக்குலுக்கு பயந்தே, அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக, பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான, சர்தார் அயாஸ் சாதிக், தற்போது தெரிவித்துள்ளார்.பாக்., பார்லிமென்டில், அவர் கூறியதாவது: அபிநந்தனை கைது செய்த பின், பார்லிமென்ட் அவசர கூட்டம் நடந்தது. பிரதமர் இம்ரான் கான், இந்த கூட்டத்துக்கு வர மறுத்து விட்டார்.

வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி உட்பட பல அமைச்சர்கள், ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர். நானும் இதில் கலந்து கொண்டேன். அப்போது, 'அபிநந்தனை ராணுவம் விடுவிக்க வேண்டும். இல்லையெனில், இன்று இரவு, 9:00 மணிக்கு, பாகிஸ்தானை இந்திய ராணுவம் தாக்கும்' என, வெளியுறவு அமைச்சர் குரேஷி, நடுக்கத்துடன் கூறினார். இதைக்கேட்ட, ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியது; அவரது கால்கள் நடுங்கியதை, நான் பார்த்தேன்.


ஆதரவு இல்லை



இந்தியா எந்த தாக்குதலும் நடத்த திட்டமிடவில்லை என, பின் தெரிந்தது. ஆனால், இந்தியாவுக்கு பயந்து அபிநந்தனை, பாக்., அரசு விடுவித்துவிட்டது.காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளிலும், இம்ரானுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வந்தன; இனி, எதற்கும் ஆதரவு தர மாட்டோம்இவ்வாறு, அவர் கூறினார்.

பாக்., எதிர்க்கட்சி தலைவரின் இந்த ஒப்புதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளதாவது: காங்கிரஸ் இளவரசருக்கு, இந்தியா மீது நம்பிக்கையும் இல்லை; பற்றும் இல்லை. அவருக்கு பிடித்தமான நாடுகள், பாகிஸ்தானும், சீனாவும் தான். கடந்த ஆண்டு விமானப்படை நடத்திய, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' பற்றி கேள்விகள் கேட்டு, நம் ராணுவத்தை, ராகுலும், அவரது கட்சியினரும் அவமானப்படுத்தினர். தற்போது, இந்திய ராணுவத்துக்கு பயந்து தான், அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் அரசியல்வாதிகளே கூறியுள்ளனர். இவ்வாறு, அவர்
கூறினார்.


பாக்., பார்லி.,யில் 'மோடி' கோஷம்



பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரான்ஸ் பொருட்களை பாகிஸ்தானியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது, வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசினார். அப்போது பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'மோடி, மோடி' என, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கூறினர். இதனால், பார்லி.,யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இம்ரான் கான் விடுவிப்பு



பாகிஸ்தானில், 2014ல், இம்ரான் கானின், பாகிஸ்தான் டெஹ்ரீக் இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் அவாமி டெஹ்ரீக் கட்சியும் இணைந்து, இஸ்லாமாபாதில் பேரணி நடத்தின. இதில் கலவரம் வெடித்தது. மூன்று பேர் இறந்தனர். இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து, இம்ரான் கான் நேற்று விடுவிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-அக்-202016:44:17 IST Report Abuse
Endrum Indian பப்பு தி கிரேட் அப்படி இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டுமே இல்லையென்றால் அவருக்கு .....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
30-அக்-202012:56:11 IST Report Abuse
M.COM.N.K.K. விரைவில் பாகிஸ்தான் அமைதி வழிக்கு திரும்பவேண்டும் அதுவே எங்களுடைய அனைவரின் விருப்பமாகும்.இல்லையேல் இந்தியா மாற்று வழியை பின்பற்றவேண்டிவரும்.இதை பாகிஸ்தான் நன்கு புரிந்து செயல்படுவது அந்த நாட்டிற்கு நல்லது.
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
30-அக்-202010:33:41 IST Report Abuse
gayathri பீலா விடுங்கடா அப்படி எந்த ராணுவமும் உலகத்தில் பயந்து கொண்டு இருந்தால் அவர்கள் பயனில்லை என்றே அர்த்தம்
Rate this:
30-அக்-202017:08:09 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஒங்க பேர் சூப்பர்...
Rate this:
30-அக்-202017:11:49 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு.....பெண்மணியே...
Rate this:
30-அக்-202017:38:52 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு"பீலா விடுங்கடா" அப்படி என்னம்மா கோவம் மோடி ஆட்சி மேல ? முத்தலாக் கொடுமையில் இருந்து உங்களை அவரு விடுவிக்கலையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X