சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல்

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 6.88 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்தனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் கடந்த, 24 ம் தேதி கோவை வந்தது. அதில் பயணம் செய்த ஆறு

கோவை: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 6.88 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்தனர்.



latest tamil news



வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் கடந்த, 24 ம் தேதி கோவை வந்தது. அதில் பயணம் செய்த ஆறு பேரின் நடவடிக்கையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக துணை இயக்குனர் சதிஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்களின் உடமைகளை பரிசோதித்தனர்.

இதில் தங்கத்தை பசை வடிவில் மாற்றி அவற்றை துணிகள், உள்ளாடைகளில் அவர்கள் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து, ரூ.3.6 கோடி மதிப்பிலான, 6.88 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளிடம் கமிஷன் தொகைக்காக தங்கத்தை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த சஜீப், பாஷா, நாசர், சாகுல் ஹமீது, யுவராஜ், தர்மராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தி அதிகாரிகள் பிணையில் விடுவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Kannan - Chennai,இந்தியா
29-அக்-202022:14:42 IST Report Abuse
K.Kannan அதிகாரிகளிடம் கமிஷன் தொகைக்காக தங்கத்தை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த சஜீப், பாஷா, நாசர், சாகுல் ஹமீது, யுவராஜ், தர்மராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களுக்கு இதுதான் வேலை யா ?
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
29-அக்-202021:54:19 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இந்த நாட்டிற்குஎதிராக சதிசெய்ய முற்பட்டிருக்கும் குறிப்பிட்ட வகுப்பினரை.. தோலை உரித்தாலும் தப்பே இல்ல..விடாதீங்க மெய் லார்ட்
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
29-அக்-202021:39:42 IST Report Abuse
Ramona Side effects of swapna aunty, the bounties will continue till entire gold in Dubai, reaches godsownland.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X