சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,29) அதிகபட்சமாக சென்னையில் 902பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.87 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 756 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,98,487பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 251 பேருக்கும், சேலத்தில் 170 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், ஈரோடில்124 பேருக்கும், திருப்பூரில் 94 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 89 பேருக்கும், தஞ்சாவூரில் 88 பேருக்கும், வேலூரில் 59 பேருக்கும், துாத்துக்குடியில் 57 பேருக்கும், மதுரையில் 51 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பு
இன்று சென்னையில் 9 பேரும், திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர்,சேலத்தில் தலா 2 பேரும், கோவையில் 6 பேரும், திருவாரூரில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, சேலம், திருப்பூரில் தலா 2 பேரும், வேலுார்,திருவள்ளூர், தேனி, தஞ்சாவூர் ,ராமநாதபுரம், ஈரோடில் தலா ஒருவரும் என 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 902 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,87,233 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 633 பேரும், சேலம், செங்கல்பட்டில் தலா 197 பேரும், திருவள்ளூரில் 191 பேரும், கிருஷ்ணகிரியில் 148 பேரும், திருப்பூரில் 114 பேரும், நாமக்கல்லில் 93 பேரும், திண்டுக்கல்லில் 88 பேரும், ஈரோடில் 83 பேரும், வேலுாரில் 78 பேரும், தஞ்சாவூரில் 66 பேரும், திருச்சியில் 67 பேரும், துாத்துக்குடியில் 65 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE