பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Updated : அக் 30, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அக்., 30, 1908ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், செல்வச் செழிப்பில், 1908 அக்., 30ம் தேதி பிறந்தவர், முத்துராமலிங்கத் தேவர். பிறந்த சில மாதத்திலேயே, தாயை இழந்தார். உடல்நலக் குறைவால், பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்றது. சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக போராடி, வெற்றி கண்டார். தாழ்த்தப்பட்டோரை, மதுரை
தெய்வத் திருமகன், முத்துராமலிங்கத் தேவர், தேவர் ஜெயந்தி


அக்., 30, 1908


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், செல்வச் செழிப்பில், 1908 அக்., 30ம் தேதி பிறந்தவர், முத்துராமலிங்கத் தேவர். பிறந்த சில மாதத்திலேயே, தாயை இழந்தார். உடல்நலக் குறைவால், பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்றது.

சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக போராடி, வெற்றி கண்டார். தாழ்த்தப்பட்டோரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று, வழிபாடு நடத்த செய்தார். 32 கிராமங்களில், தனக்குச் சொந்தமான நிலங்களை, தாழ்த்தப்பட்டோருக்கு தானமாக வழங்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். சிறை வாசம் அனுபவித்தார். சுதந்திரத்திற்கு பின், காங்கிரசில் இருந்து விலகி, பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். சட்டபேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.கடந்த, 1963 அக்., 30ம் தேதி, தன், 55வது வயதில் காலமானார்.

'தெய்வத் திருமகன்' முத்துராமலிங்கத் தேவர் பிறந்த மற்றும் நினைவு நாள் இன்று!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
30-அக்-202021:10:02 IST Report Abuse
r.sundaram அவரின் ஆன்மிக விஷயங்களை பற்றி சொல்லவே இல்லையே. ஆன்மிகத்தில் மிக ஈடுபாடு கொண்டவர் அவர். அதிலும் விசேஷமாக ஆகம விஷயங்களில் அவர் ஒரு நிகரில்லாதவர். ஒரு கோவில் கட்டுவது என்றால் , மூலவர் எத்தனை உயரம், அதற்கேற்ப கர்பக்ரக நடை உயரம், மண்டபம், கோபுரம், விமானம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது மாதியான விஷயங்களில் அவர் மிகவும் அறிவுடையவர்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-அக்-202020:45:00 IST Report Abuse
Bhaskaran பர்மாவுக்கு போன போது அங்கே இளம் பெண்கள் இருவரிசையாக இருந்து தங்கள் கூந்தலை விரித்து அதில் முக்கியமானவர்களையும் துறவிகளையும் நடக்கச்செய்து வரவேற்பளிப்பது வழக்கம் .அம்மாதிரி தேவர்பிரானுக்கு வரவேற்பளித்தபோது தான் மதிக்கும் பெண் இனத்தை அவமானப்படுத்தியது போல் ஆகும் என்று மறுத்துவிட்டார் என்பது வரலாறு ..
Rate this:
Cancel
sukkan galpa - BSB,புருனே
30-அக்-202007:51:23 IST Report Abuse
sukkan galpa He has been a respec personality. But politicians and his own community people portraying him to the range of GOD.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X