சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கதக்கது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
அரசாணையை அமல்படுத்தும் வகையில் மருத்துவ கலந்தாய்வு தேதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும். அரசுப்பள்ளிமாணவர்கள் உரிய பலன் அடைய திமுக பல்வேறு தளங்களில் போராட்டங்களை முன்னெடுத்தது.அரசாணையை வெளியிடதமிழக அரசுக்கு இந்த அதிகாரம் இருக்கின்றது என்றால் அரசாணையை கவர்னருக்கு அனுப்பி கிடப்பில் போட்டது ஏன்

இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசோ, கவர்னரோ கிஞ்சித்தும் கவலை கொண்டதாக தெரியவில்லை. அரசாணையில் கவர்னரின் ஆணைப்படி என்பது நிர்வாக நடைமுறையா? கையெழுத்து பெறப்பட்டதா நிர்வாக அரசாணையை எந்த வித இடையூறும் நேர்ந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமையை அரசு நிறைவவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE