சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

விவசாயிகளே, வாழ்க பல்லாண்டு

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நாள்தோறும் மூன்று வேளைக்கு, 130 கோடி இந்திய மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஏராளமானப் பிரச்னைகள் உள்ளன. கட்டுப்படியாகாத விவசாயம், மழை, வெள்ளம், வறட்சி, உழவுத் தொழில் தெரிந்த வேலையாட்கள் இல்லாத நிலைமை, விளைந்த பொருட்களை விரைவாக விற்பனையாக்க
சிந்தனைகளம், விவசாயிகள், பல்லாண்டு

நாள்தோறும் மூன்று வேளைக்கு, 130 கோடி இந்திய மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஏராளமானப் பிரச்னைகள் உள்ளன. கட்டுப்படியாகாத விவசாயம், மழை, வெள்ளம், வறட்சி, உழவுத் தொழில் தெரிந்த வேலையாட்கள் இல்லாத நிலைமை, விளைந்த பொருட்களை விரைவாக விற்பனையாக்க முடியாமல் அல்லல்படுவது போன்ற கஷ்டங்களைச் சொல்லி மாளாது. பருவ கால மழை அதிகமாகப் பெய்தும், காய்ஞ்சும் காயப்படுத்துகிறது. நல்ல முற்றிய விதைகள் கிடைப்பதில்லை. போதிய நீர்ப்பாசன வசதியின்மை, அறுவடை செய்த பொருளை விற்பனை செய்ய முடியாமல் அலைவது, திகைப்பது, திண்டாடுவது மிக மிக வேதனைக்குரிய உண்மை.விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டால், தாங்கிக் கொள்ள முடியாது. வாழ்வாதாரமே நசிந்து விட்டால் எதிர்காலம் இருண்டுபோக, வாழ்வதை விட சாவதே மேல் என்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.விவசாயிகளின் வேதனைகளும், துயரங்களையும் பார்த்துக்கொண்டு மத்திய அரசும் சும்மா இருக்கவில்லை.

விவசாயிகளின் நல்வாழ்விற்காக, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் நிறைந்துள்ள பல கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில், 6,000 ரூபாய் வழங்கத் துவங்கியுள்ளது, நமக்கு ஆறுதல் அளிக்கிறது. எனினும், இது போதாது. ஆண்டு முழுதும் நிலையான மற்றும் நியாயமான வகையில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நதி நீர் பாசனத்திற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். கடந்த 20, 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த, 99 பாசன திட்டங்களை முதலில் நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளதை வரவேற்போம். இதற்கென, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் போற்றத்தக்கதாகும்.
ஒவ்வொரு கிராமத்திலும் மண் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் வேண்டும். மண்ணின் வளத்திற்கு ஏற்ப எந்தப் பயிர் பயிரிடலாம், எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை இந்த வகையான மண் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

விவசாய பயிர்களுக்கு சோதனை ஏற்பட்டு அழியுமானால், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் வழங்கி, விவசாய பெருங்குடிமக்களைக் காப்பாற்ற வேண்டும். 'ரிஸ்க் புரூப்' அதாவது இடர்பாடுகள் வந்தாலும் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு, 5-6 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாயிகளுக்கென கிராமப்புற சில்லரை விவசாய விற்பனைக் கூடம் அவசியமாகத் தேவை. இத்திட்டத்தின் கீழ் எல்லா கிராமப்புற சந்தைகளையும் இணைத்து விற்பனை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.
தற்கொலை என்னும் அவலத்திலிருந்து மீண்டு எழுவதற்கு முயல்கின்றனர். தற்சார்புடனும் வாழ இளம் தலைமுறையினர் தீர்மானிக்கின்றனர். படித்த பல இளம் விவசாயிகள் சூறாவளியாகக் களம் இறங்கியுள்ளனர்.உதாரணத்திற்கு சிலர்திருப்பூரை அடுத்த தொங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர்,1 ஏக்கர் நிலத்தில், 900 வாழைக் கன்றுகளை நட்டு உரமிட்டு, சொட்டு நீர்ப்பாசனம் செய்தார். ஏறத்தாழ, 10 மாத காலம் உழைத்தார். வாழைக் கன்று வளர்ந்து, வாழைப்பூ ஈன்றது. பின் காயாக, பழமாகப் பழுத்தது. ஒரு வாழைக் கன்றுக்கு, 100 ரூபாய் செலவு செய்தார். 900 வாழைக்கு, 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார். ஒரு வாழையில், 15 கிலோ பழம் கொடுத்தது. 900 வாழைகளில், 1 லட்சத்து, 35 ஆயிரம் கிலோ பழங்கள் கிடைத்தது. அவருக்கு அத்தனையையும் சந்தைப்படுத்த முடிந்தது. செலவு போக, 2 லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் கிடைத்தது.

கடவுள் அருளால், இந்த வாழை கடும் வறட்சி, பெரும்புயல், சூறாவாளிக் காற்று இல்லாமல் தப்பித்து, தன்னைப் பயிரிட்ட விவசாயிக்கு வாழ்வு அளித்தது.இதேபோல, பல இன்னல்களுக்கு இடையே, நாகை மாவட்டம், ஏர்வாடி கிராமத்தில், பாலசுப்ரமணியம் என்பவர், 1 ஏக்கரில் பயறும், இன்னொரு ஏக்கரில் உளுந்து மற்றும் நிலக்கடலையும் பயிரிட்டார். இந்த, 100 நாள் பயிர் அவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டித் தந்தது. நிலக்கடலை, 1 ஏக்கருக்கு, 2,000 கிலோ விளைந்து, 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டித் தந்தது.

இவர் ஏறத்தாழ, 35 ஏக்கரில் நெல், கரும்பு, உளுந்து, பயறு, சவுக்குமரம், பயிரிடுகிறார். நெல் பயிரில் லாபம் வருவதில்லை; பெரும்பாலும் நஷ்டம் தான். அதை மற்ற பயிர் வகைகளும், சவுக்கு மரமும் ஈடுகட்டுகின்றன. நான் பார்த்த திருப்பூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள், லாப நோக்கில் அல்லாமல், விவசாயத்தைத் தொண்டாக, சேவையாக வாழ்நாள் முழுதும் செய்து, இன்று தற்சார்பு நிலையை அடைந்துள்ளனர். இவர்கள், அரசின் பல உதவிகளையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
புதுப்புது முயற்சிகள்திண்டுக்கல் மாவட்ட, பி.கொசுவபட்டி கிராமத்தைச் சேர்ந்த மஹாலட்சுமி, 5 ஏக்கர் நிலமுடைய விவசாயி. அவர் தன் நிலத்தில், 2016க்கு முன், 3 ஏக்கர் நிலத்தில் நெல்லி மரங்களைப் பயிரிட்டு, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வீதம் ஈட்டிய வருமானம் போதவில்லை.ஆண்டு வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த எண்ணினார். இவர், திண்டுக்கல்லிலுள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தில், கிரிஷி விஞ்ஞான் கேந்திரா நடத்திய பால் பண்ணைத் தொழிற்பயிற்சி வகுப்பில் பங்குபெற்று, மாடுகள் பராமரிப்பு மற்றும் பால் பண்ணை மாடுகள் வளர்ப்புப் பற்றி கற்றறிந்தார்.அதன் விளைவாக, 2017ல், இரண்டு கறவை மாடுகளை வாங்கி, தான் கற்ற பால் பண்ணை தொழில்முறைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியையும், தன் மாத வருமானத்தையும் பெருக்கினார்.

தற்போது, 10 பசு மாடுகளை வைத்து, நல்ல வருமானம் உள்ள வாழ்க்கையை உருவாக்கி விட்டார். மேலும், அவர் ஒரு நாளைக்கு, 80 லிட்டர் பாலை உள்ளூர் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்று வருகிறார். 1 லிட்டர் பால், 25 ரூபாய்-க்கு விற்பதால், ஒரு மாதத்திற்கு, 60 ஆயிரம்- ரூபாய் வருவாயை அவரால் சுலபமாகப் பெற முடிகிறது.மிளகாய்ப் பொடிகாந்தி நகருக்கு மிக அருகே ஒரு கிராமம் இருக்கிறது;அங்கு மிளகாய் பயிரிடுவது வழக்கம். நம் ஊர்களில், ஒரு விவசாயி ஒரு பயிரை தன் நிலத்தில் விளைவித்தால், அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயியும், அதே பயிரை விளைவிக்கத் துவங்கி விடுவர். இதன் விளைவாக விலை சரியத் துவங்கியது. அங்கு விளையும் மிளகாய் அத்தனையும் விற்ற பிறகும் கூட, அந்த கிராமத்தின் வருமானம், 3 லட்சம் ரூபாயை தாண்டவே இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.
எனவே, அந்த கிராமத்தினர் ஒரு சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தனர். தங்களிடம், 24 மணி நேர மின் வசதி இருப்பதால், அவர்கள் மின் இணைப்பைப் பெற்றனர்; அதைப் பயன்படுத்தி, மிளகாய்ப் பொடியை தயாரிப்பது என்று முடிவு செய்தனர்.

இதற்கான பதனிடும் இயந்திரங்களை வாங்கி, அதை பொட்டலமாக்கும் வேலையையும் முடித்தனர். இதுவரையில், மொத்தம், 3 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்ற அவர்கள், இப்போது, 3-4 மாத கால முயற்சிக்குப் பின், அதேயளவு மிளகாயில், மிளகாய்ப்பொடி விற்று, 18 லட்ச ரூபாய் வருமானம் பெறுகின்றனர்.இத்தகைய விவசாயிகளின் உழைப்பைப் பார்த்து, அனைவரும் பிரமிப்பு அடைவர். இது சாதாரண காரியம் அல்ல. ஆழ உழுவதை விட அகலமாக உழுது, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, பருவத்தை பயிர் செய்து, பிரமாண்ட சாதனைப் படைத்து வருகின்றனர், நம் விவசாயிகள். தீவிரமான, கடுமையான வேலையின் மூலம், நம் விவசாயிகள் கடந்த ஆண்டு, இதுவரையில் இல்லாத வகையில் உணவு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்துள்ளனர்.மத்திய அரசு புதிய விவசாயச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன் மூலம் சோர்ந்து, நலிந்து போய் விட்ட விவசாயிகளுக்கு, தனியார்களும் தாமாக முன்வந்து முதலீடு செய்யவும், ஒரு ஒப்பந்தம் மூலம் கூட்டாக விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், வழிவகை செய்யவும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.ஆனால், எதிர்க்கட்சிகள் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விடுவர் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். எனினும், ஒட்டு மொத்தமாக விவசாயிகள் வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம், எல்லார் மனதிலும் உருவாகியுள்ளது என்பது நிச்சயம்.விவசாயிகளே, நீங்கள் வாழ்க பல்லாண்டு.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நாம் இணைந்து செயல்படுவோம். விவசாய விளைபொருட்களாகவோ, கால்நடை வளர்ப்பாகவோ இருக்கலாம்.

விவசாயிகளின் மேம்பாட்டோடு தொடர்புடைய அனைத்து வழிகளிலும் நாம் கவனம் செலுத்தி விவசாயிகளைக் கொண்டாடி, அவர்கள் வாழ்வில் வளம் ஓங்கச் செய்வோம். விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கச் செய்வோம். 'உழவர்கள் உழவைக் கைவிட்டுவிட்டால், இந்த நாட்டில் துறவிகளும், சன்னியாசிகளும் கூட வாழ முடியாது' என்று, திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

விவசாயமே செல்வத்தைத் தருகிறது; அறிவை வளர்க்கிறது. விவசாயமே மனித வாழ்வின் அடிப்படை. விவசாயிகளே, நீங்கள் வாழ்க வளமுடன் என்று அவர்களைக் கொண் டாடுவோம்!

வி. சண்முகநாதன்

முன்னாள் கவர்னர்
தொடர்புக்கு:
இ -மெயில்:
vsnathan7666@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-அக்-202015:42:24 IST Report Abuse
sankaseshan தகவல் நன்றாகத்தான் இருக்கிறது அனால் பயனடைவது சரத் அஜித் பவர்கள் நம்மவூர் அய்யாக்கண்ணு நாராயணசாமி மற்றும் பல பணக்கார விவசாயிகள் .
Rate this:
Cancel
30-அக்-202012:50:02 IST Report Abuse
kulandhai Kannan புதிய வேளாண் சட்டங்களை பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு வகையறாக்கள் எதிர்ப்பதைப் பார்த்தால், தற்போதைய வழிமுறைகளின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் பாலும், தேனும் ஓடுவதாக அல்லவா நினைக்க வேண்டியுள்ளது.
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
30-அக்-202010:39:27 IST Report Abuse
gayathri விவசாயத்தில் இருந்து பார்த்தால் தெரியும், அதன் கஷ்டங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X