மீள துவங்கியது பொருளாதாரம்: மோடி பெருமிதம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ‛‛பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கியதன் வாயிலாக, நாட்டின் பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட, மிக வேகமாக மீளத் துவங்கி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:கடந்த கால ஆட்சியாளர்களால் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை, தற்போது மேற்கொள்ள,
பொருளாதாரம், மோடி, பெருமிதம்

புதுடில்லி: ‛‛பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கியதன் வாயிலாக, நாட்டின் பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட, மிக வேகமாக மீளத் துவங்கி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த கால ஆட்சியாளர்களால் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை, தற்போது மேற்கொள்ள, கொரோனா நெருக்கடி காலம், வாய்ப்பு உருவாக்கி தந்துள்ளது. நிலக்கரி, விவசாயம், தொழிலாளர் நலன், ராணுவம், விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி காலத்திற்கு முன் இருந்த நிலையை விட, நாட்டை வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறச் செய்ய, இந்த நடவடிக்கைகள் பேருதவியாக இருக்கும்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தடுப்பூசி கிடைக்க வழி செய்யப்படும். முதன்மை பணியாளர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, அதை சரியான நேரத்தில் படிப்படியாக தளர்த்திய காரணத்தினால், நாட்டின் பொருளாதார நிலை, எதிர்பார்த்ததை விட, மிக வேகமாக மீளத் துவங்கி உள்ளது.

ஆகஸ்ட் மற்றும் செப்., மாதத்திற்கான பொருளாதார புள்ளிவிபரங்கள், இதை உறுதி செய்கின்றன.இதன் வாயிலாக, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை, 2024ல் நாம் எட்டிப்பிடிப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-அக்-202005:01:09 IST Report Abuse
J.V. Iyer குஜராத்தில் மோடிஜி பார்க்காத தடைகளா அவர் அதை எப்படி வெற்றிகரமாக வென்று முன்னேற்றினார் என்று உலகிற்கு தெரியும். இப்போது கரோனாவினால் பின்னடைவு என்பது புலி பதுங்குவது போல. இப்போது நாட்டு வளர்ச்சியை எங்கும் காணலாம். மோடிஜி இருக்கும் வரையில் தடைக்கற்கள் எல்லாம் வளர்ச்சியின் படிக்கட்டுக்களே மோடிஜியும் இந்தியா முதன்மையான நாடு ஆகும் வரையில் ஓயமாட்டார்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202013:38:40 IST Report Abuse
கொக்கி குமாரு கடன் கொடுத்தவன் சுடலையுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ்காரன் (எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சிதம்பரம்). இப்போது கடனை வசூலிக்க ஏற்பாடு செய்வது மோடிஜி. ஆனால் கூப்பாடு போடுவது மோடிஜி ஒழிக என்று. கலிகாலம்டா. வெற்றிகொடிக்கட்டு அவர்களே, கொஞ்சமாவது படித்து அல்லது நன்கு படித்தவர்களிடம் கேட்டு இந்திய அரசியலை தெரிந்துகொள்ளவும்...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202014:13:32 IST Report Abuse
கொக்கி குமாரு Writeoff மற்றும் waiveoff இவற்றிக்கு உள்ள வித்தியாசம் தெரியாத தங்களை போன்றவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது மிக கடினம். சிந்திக்க தெரியாதவர்கள் இருக்கும் இடத்தில் மௌனமாய் இருப்பவன் புத்திசாலி என்பார்கள். என்ன சொல்ல வருகிறேன் என்று தெரிகிறதா?...
Rate this:
30-அக்-202018:32:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அதனால் தான் நான் மௌனமா இருக்கேன்...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-அக்-202004:11:45 IST Report Abuse
blocked user பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று வின்சி சொன்னால் தவிர நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X