அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெள்ள அபாயம் தவிர்க்க சென்னையை காப்பாற்றுங்கள்:

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : 'வெள்ள அபாயம் தவிர்க்க, பேரிடர் மீட்பு படையை அழைத்து, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, சென்னையை காப்பாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வடகிழக்கு பருவ மழை துவங்குவது, முன்கூட்டியே முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் தெரியும். அவர்கள் காட்டிய அலட்சியத்தால், ஒரு நாள் மழையை கூட தாங்க முடியாமல்,
சென்னையை காப்பாற்றுங்கள்:

சென்னை : 'வெள்ள அபாயம் தவிர்க்க, பேரிடர் மீட்பு படையை அழைத்து, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, சென்னையை காப்பாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:வடகிழக்கு பருவ மழை துவங்குவது, முன்கூட்டியே முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் தெரியும். அவர்கள் காட்டிய அலட்சியத்தால், ஒரு நாள் மழையை கூட தாங்க முடியாமல், சென்னையின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.சென்னை மீண்டும், '2015 டிசம்பர்' வெள்ள அபாயத்தை சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம், மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மழைநீர் வடிவதற்கான அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏழை எளியோருக்கு உணவு உள்ளிட்டவற்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசால் முடியவில்லை என்றால், தயவு செய்து, பேரிடர் மீட்புப் படையை அழைத்து, சென்னை மாநகரை காப்பாற்ற, போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தி.மு.க., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், சிரமப்படும் மக்களுக்கு, ஆங்காங்கே தேவையான அளவு உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தேர்தல் பொதுக்கூட்டங்கள் தி.மு.க., தலைமை அறிவிப்பு

பல்வேறு மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த, முப்பெரும் விழாக்களில், ஸ்டாலின் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில், வரும் சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என, அறிவித்துள்ளார்.அதன் விபரம்:நவம்பர் 1 -- ஈரோடுநவ., 2 - புதுக்கோட்டை - கருணாநிதி சிலை திறப்பு விழாநவ., 3 - - விருதுநகர்நவ., 5 - துாத்துக்குடிநவ., 7 -- வேலுார்நவ., 8 - - நீலகிரிநவ., 9 - -மதுரைநவ., 10 -- விழுப்புரம்


நிர்வாகிகள் நியமனம்!

தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, பெ.சுப்பிரமணியும், பொறுப்புக் குழு உறுப்பினர்களாக, ஒன்பது பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்திற்கு, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, இன்பசேகரன்; பொறுப்பு குழு உறுப்பினர்களாக, ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்திற்கு, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
31-அக்-202017:07:40 IST Report Abuse
Marai Nayagan சுடலை அப்புடி என்னத்த செய்தார்? சொல்லாதது இங்கே... //தமிழ்நாட்டைப்(திமுக தலைவரின் குடும்பம்) பொருளாதார வலிமை மிக்க மாநிலமாகவும் கல்வி(தனியார் பள்ளி கல்லூரிகள்) - சுகாதாரம் (தனியார் மருத்துவ கல்லூரிகள் )- தொழில் வளர்ச்சி (டாஸ்மாக் ) - வேலைவாய்ப்பு (நில அபகரிப்பு) ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகவும் உருவாக்கியதில் திமுக அரசின் பங்கு மகத்தானது என்பதை அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து ஏற்றுக் கொள்வர். //
Rate this:
Cancel
30-அக்-202013:31:58 IST Report Abuse
ஆப்பு சுடலையும் அவரோட ஆளுங்களும் சென்னையை காலி செய்து கொண்டு எங்கேயாவது போயிட்டா அந்த ஆக்கிரமிப்புகளை ஏரிகளா மாத்தி நீர் சேகரிக்கலாம்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202014:07:11 IST Report Abuse
கொக்கி குமாரு ஆப்புவா இது? சுடலை பாவம் ஆப்பு. உங்களை போன்றவர்களும் அவரை காலை வாரிவிட்டால் என்ன செய்வார் பாவம்?...
Rate this:
30-அக்-202014:26:19 IST Report Abuse
ஸ்டாலின் ::நங்கள் என்ன உன்னைப்போல சிங்கி ஹிந்துவிடம் காட்டிக் கொடுக்கும் எட்டப்ப தமிழர்கள் அல்ல மறத்தமிழர்கல்...
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202012:26:21 IST Report Abuse
கொக்கி குமாரு ஆண்டுதோறும் மாநகராட்சியால், 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஹி...ஹி...ஹி...அதில் 3 லட்சம் பொது மக்களுக்கு சென்றடைந்தால் பெரிய விஷயம். அவ்வளவு பணமும் திருட்டு திமுகவின் கோபாலபுரம் கோட்டை, திருட்டு திமுகவின் அல்லக்கைகள், அவர்கள் அரசில் அரசு வேலை வாங்கியவர்கள் போன்றவைகள் பங்கு பிரித்துக்கொள்வார்கள். ஏனென்றால், காலம் காலமாய் சிங்கார சென்னை என்பது திருட்டு திமுகவின் கோட்டை அல்லவா. அனுபவியுங்கள் சென்னைவாசிகளே.
Rate this:
30-அக்-202014:15:59 IST Report Abuse
ஸ்டாலின் ::இது எல்லாம் நீ இரண்டு கோடிக்கு இட்டிலி சாப்பிட்டிய அப்போ தெரியலயா என்ன , 10 வருஷம் அவன் ஆட்சியில் இல்லை ஆனாலும் நீ இன்னமும் அவன் நினைப்பு தான் , சரி இவர்கள் இப்படி என்றால் குஜராத்த பீகார் எல்லாம் வெள்ளம் வருது அப்போ அங்கு மோடி ஆட்சி செயும்போது உங்கள் அரசு அலுவலர்கள் இப்படி தானோ அதுதான் அங்கு வெள்ளம் வந்ததோ...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-அக்-202016:41:44 IST Report Abuse
கொக்கி குமாரு முடியட்டும் விடியட்டும் தமிழன் அவர்களே, முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் வெள்ள பிரச்சனைகளுக்கு யார் காரணம், அதனை தீர்ப்பது எப்படி என்று யோசிப்போம். பிறகு ஆற அமர உட்கார்ந்து குஜராத்தில் என்ன பிரச்சனை, பீகாரில் என்ன பிரச்சனை என்பது பற்றி யோசிப்போம். தங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா இந்த மாநிலங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை. நேராக பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஓட வேண்டியது. இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து உங்கள் தெருவில் மின் விளக்கு எரியவில்லை, உங்கள் தெருவில் சாக்கடை அடைத்து கொண்டது என்றாலும் மோடிஜியை குறை சொல்வீர்கள் போலும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X