சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானி சாதுர்யம் 187 பேர் உயிர் தப்பினர்

Added : அக் 29, 2020
Share
Advertisement
சென்னை:நடுவானில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அந்தமான் சென்ற விமானம், மீண்டும் சென்னைக்கே திரும்பியது. உரிய நேரத்தில், விமான பைலட் பழுதை கண்டறிந்ததால், 187 பயணியர் உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து நேற்று காலை, 5:20 மணிக்கு, 181 பயணியர், ஆறு விமான ஊழியர்களுடன், 'ஏர் இந்தியா' விமானம், அந்தமானுக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில்

சென்னை:நடுவானில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அந்தமான் சென்ற விமானம், மீண்டும் சென்னைக்கே திரும்பியது. உரிய நேரத்தில், விமான பைலட் பழுதை கண்டறிந்ததால், 187 பயணியர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து நேற்று காலை, 5:20 மணிக்கு, 181 பயணியர், ஆறு விமான ஊழியர்களுடன், 'ஏர் இந்தியா' விமானம், அந்தமானுக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை, பைலட் கண்டறிந்தார். விமானத்தை அவசரமாக தரையிறக்க, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு அனுமதி கோரப்பட்டது.

ஏ.டி.சி., உத்தரவின்படி, அந்த விமானம், சென்னையில் நேற்று காலை, 6:15 மணிக்கு, பத்திரமாக தரையிறங்கியது.விமான பொறியாளர்கள், இயந்திர பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின், இயந்திர பழுது சரி செய்யப்பட்டு, அந்த விமானம் நேற்று காலை, 10:30 மணிக்கு, அந்தமான் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில், விமான பைலட் பழுதை கண்டறிந்து, சாதுர்யமாக செயல்பட்டதால், பயணியர் விபத்தில் இருந்து தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X