பொது செய்தி

தமிழ்நாடு

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: கவர்னர் ஒப்புதலின்றி அரசாணை

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள்
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: கவர்னர் ஒப்புதலின்றி அரசாணை

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தன.அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா செப். 15ல் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் கவர்னர் இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை. எனவே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கவில்லை. கவர்னரை முதல்வரும் அமைச்சர்களும் சந்தித்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.'கவர்னர் ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என சட்ட ரீதியாக கூறலாம்.


ஆனால் மனசாட்சிப்படி கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் நேற்று தெரிவித்தது.சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையை சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.இதன் அடிப்படையில்மாணவ மாணவியரை சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனர், கூடுதல் இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமி
யோபதி மருத்துவ இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நிர்வாக ரீதியான உத்தரவு: பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம்''அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு வழங்கி நிர்வாக ரீதியான உத்தரவை அரசு பிறப்பிக்க முடியும்'' என மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது. சட்டசபை தீர்மானத்துக்கும் அரசு பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவை நிர்வாக ரீதியாக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையும் கவர்னரின் பெயரில் தான் வெளிவரும்.ஒருவேளை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி விட்டால் இந்த நிர்வாக ரீதியான அரசாணை அவசியமற்றதாகி விடும்.இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.


அரசாணை ஏன்? முதல்வர் விளக்கம்'ஏழை மாணவ, மாணவியரின் கனவுகளை நிறைவேற்றவே, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்துள்ளார். அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூக நீதி காக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, ஏழை மாணவ -- மாணவியரின், மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும், அவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202014:36:47 IST Report Abuse
ஸ்டாலின் :: " 7.5% இட ஒதுக்கீடு ஆளுநர் தாமதத்தால் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி". இதே போல அதிமுக அரசு " மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமைச்சரவையை கூடி அந்த மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என்று அரசாணை வெளியீடுவார்களா?. இந்த அரசாணையை " மத்திய அரசு " ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கும். இதற்கெல்லாம் பதில் " உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் திங்கட்கிழமை ஆளுநர் தரப்பு அளிக்கும் பதிலில் உள்ளது
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-அக்-202014:35:47 IST Report Abuse
Svs Yaadum oore இந்த நீட் தேர்வை எதிர்த்தது எல்லாம் தனியார் பள்ளியில் படிக்கும் வசதியான வர்க்கம் தான் …..அவனுகளுக்குத்தான் இப்போது ஆப்பு …..அவனுக இனிமேல் போய் சுடலைகிட்ட முறையிட வேண்டியதுதான் …..ஆட்சிக்கு வந்தால் சுடலை நீட் தேர்வை நீக்குவதாக வாக்குறுதி …அப்படி நீட் தேர்வை தடை செய்தால் , சுடலை இந்த 7.5 சதவீதம் நீக்குவாரா என்பதில் தெளிவில்லை ……
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-அக்-202014:18:26 IST Report Abuse
Svs Yaadum oore ஆளே இல்லாத ஹந்துகளுக்கு ஏன் 10% கொடுக்கணும் என்று என்ன உளறல் ??…..ஆந்திராவில் மட்டும் உயர்ந்த ஜாதி 30 சதம் ….இங்கே தடுக்கி விழுந்தால் கோடீஸ்வரனெல்லாம் பிற்படுத்ப்பட்டவன் ….10% இட ஒதிக்கீட்டுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் மற்றும் கம்மிகளுடன் சுடலைக்கு என்ன கூடா நட்பு? கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியதுதானே …...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X