கோல்கட்டாவை வீழ்த்தி சென்னை அணி ‛த்ரில்' வெற்றி

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
துபாய்: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. சென்னை அணியில் டுபிளசி, இம்ரான் தாகிர், மோனு குமார் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கிடி, கரண் சர்மா

துபாய்: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. சென்னை அணியில் டுபிளசி, இம்ரான் தாகிர், மோனு குமார் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கிடி, கரண் சர்மா சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வானார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (87), சுப்மன் கில் (26), தினேஷ் கார்த்திக் (21*) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news



சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (72) நம்பிக்கை தந்தார். நாகர்கோட்டி வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்திலும் ரவிந்திர ஜடேஜா (31*) சிக்சர் அடிக்க, சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
30-அக்-202011:08:23 IST Report Abuse
Madhusoodhana Ramachandran விழலுக்கிறைத்த நீர் வீண் என்ற பழமொழிகற்ப தற்போது விளையாடி என்ன பயன். முன்பு எல்லோரும் அவசிய மான நேரத்தில் சரியாக விளையாடாமல் கோட்டை விட்டு விட்டு இப்போது எதிர்த்த அணியையும் கீழே தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதால் பயனில்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-அக்-202004:44:52 IST Report Abuse
J.V. Iyer அணையும் முன்னால் அகல் விளக்கு பிரகாசமாக எரியும். என்ன பயன் பாவம் KKR
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
30-அக்-202003:32:23 IST Report Abuse
jagan சிங்க தமிழன் வருண் , தல தோனியையே ரெண்டு முறை க்ளீன் போல்ட் செய்தது டாப் கிளாஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X