கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் கேள்வி

Updated : அக் 31, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: 'அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறா' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.கரூர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:கரூர் மாவட்டம், தாந்தோணி, பாலாஜி நகரில், அரசு புறம்போக்கு நிலத்தில், ஓடை மற்றும் வாய்க்கால் அமைந்துள்ளது. இதை பலர் ஆக்கிரமித்து, முள் வேலி அமைத்து, யாரும் செல்ல முடியாத
 கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுத்த
நடவடிக்கை குறித்து ஐகோர்ட் கேள்வி

மதுரை: 'அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறா' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.கரூர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:

கரூர் மாவட்டம், தாந்தோணி, பாலாஜி நகரில், அரசு புறம்போக்கு நிலத்தில், ஓடை மற்றும் வாய்க்கால் அமைந்துள்ளது. இதை பலர் ஆக்கிரமித்து, முள் வேலி அமைத்து, யாரும் செல்ல முடியாத வகையில், இரும்புக்கதவு அமைத்துள்ளனர்.கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தாசில்தாருக்கு புகைப்படங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பை அகற்ற, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆக்கிரமிப்பாளர்கள், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கின்றனர்' என, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


நீதிபதிகள் உத்தரவு:



அரசு நிலம், ஓராண்டாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போராட்டம் நடத்தினால், அதிகாரிகள் திரும்பி விடுவார்களா?

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை, அதிகாரிகள் என்ன செய்தனர். கடமை தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலத்தை, உடன் அளவீடு செய்ய வேண்டும். கலெக்டர், கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
30-அக்-202022:24:59 IST Report Abuse
Raj எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவது ஏன். பங்கு கேட்கும் அமைச்சர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கமிஷனர் கலைக்ட்டர் என கிராம் தங்கம் வாங்கும் அமைச்சர் எல்லாம் தமிழ் நாட்டில் உண்டு.
Rate this:
Cancel
30-அக்-202013:47:25 IST Report Abuse
ஆப்பு லட்ச லட்சமா கேஸ்கள் தேங்கி இருப்பதெல்லாம் எதுல சேர்த்தியாம்? வக்கீல்களுக்கு மேலே இப்போ நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி கேஸ்களை ஒத்தி வெச்சுடறாங்க.
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
30-அக்-202010:26:41 IST Report Abuse
g.kumaresan ஐயா காசு வாங்கிட்டு கொடுத்திட்டாங்க ஐயா ....நடவடிக்கைதான் எடுக்கணும் ஐயா நீங்க இல்லேன்னா எதுயுமே நடக்காது ஐயா ......சாட்டையை கையில் எடுங்கள் ஐயா ...அப்போதான் திருந்தும் இந்த அதிகாரி வர்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X