திருப்பதி :ஆந்திர மாநிலத்தில், நவ., 2 முதல், பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25 முதல், இங்கு பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. நவ., 2 முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.வரும், 2ம் தேதி, 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. ஒருநாள் விட்டு ஒருநாள், மதியம், 1:00 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.இதையடுத்து, நவ., 23ம் தேதியிலிருந்து, 6, 7 மற்றும் 8ம் வகுப்புகள் செயல்பட உள்ளன. டிச., 14 முதல், துவக்கப் பள்ளிகளும் செயல்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE