'ரெம்டெசிவிருக்கு' அனுமதி இல்லையா? மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு, 'ரெம்டெசிவிர்' மற்றும் 'பேவிபிராவிர்' ஆகிய மருந்துகளை பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில், அவை பயன்படுத்தப்படுவது குறித்து, நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்
'ரெம்டெசிவிருக்கு' அனுமதி இல்லையா?  மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு, 'ரெம்டெசிவிர்' மற்றும் 'பேவிபிராவிர்' ஆகிய மருந்துகளை பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில், அவை பயன்படுத்தப்படுவது குறித்து, நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும், ரெம்டெசி விர் மற்றும் பேவிபிராவிர் ஆகிய மருந்துகளை, நம் நாட்டைச் சேர்ந்த, 10 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
இந்தியா உட்பட, எந்த நாட்டிலுமே, இந்த மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ய, இன்னும் முறையான உரிமம் வழங்கப்படவில்லை. எனவே, 10 நிறுவனங்கள் மீதும், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news



இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கொரோனா சிகிச்சைக்கு, இந்த இரு மருந்துகளையும் பயன்படுத்தலாம் என, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக, செப்., 16ல்
தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உலக சுகாதார நிறுவனம், கடந்த, 15ல் வெளியிட்ட அறிக்கையை, மனுதாரர் சர்மா, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.'ரெம்டெசிவிர் மற்றும் பேவிபிராவிர் ஆகிய மருந்துகளை, கொரோனா சிகிச்சைக்கான அதிகாரப்பூர்வ மருந்தாக, உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கவில்லை' என, அவர் வாதிட்டார்.இது குறித்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-அக்-202014:37:09 IST Report Abuse
Vivekanandan Mahalingam இந்த இரண்டு மருந்துகளும் கொரோனாவிற்கு தீர்வு இல்லை என்று செய்தி வெளியாகியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X